Wednesday, December 16, 2015

உலகின் மிகப்பெரிய ஆண்குறி பொருள்காட்சி

பாலியல் பலாத்காரம் இந்த ஆண்டு இன்னமும் கூடுதலாகத்தான் நடந்திறுக்கிறதே தவிர குறைந்த பாடில்லை!!!

இந்த நல்லவனுங்க,நியாயஸ்தனுங்க, கலாச்சாரக்காவலருங்க பேச்ச கேட்டுருந்தா "உலகின் மிகப்பெரிய ஆண்குறி பொருள்காட்சி" இந்தியாலதான் இருந்துருக்கும்.

குற்றத்திற்க்கான தண்டனையென்பது குற்றத்தை மீண்டும் நடைபெறாமல் செய்வதில்தான் இருக்கிறதே தவிர "தற்காலிக நிகழ்வாக" இருக்கும் பட்சத்தில் இப்படியானதொரு முடிவை நோக்கியதாகத்தானிருக்கும்.

பெண்பிள்ளைகளுக்கு "குட் டச்" "பேட் டச்" பற்றி சொல்லிக்கொடுக்கத்துடிக்கும் சமூகம் , 
பெண்பிள்ளைகளின் "உடை நடை" பற்றி கலாச்சாரப்பாடமெடுக்க ப்ரயத்தனப்படும் சமூகம்,
பெண்களை இரவினில் வெளியே சுற்ற்க்கூடாதென அச்சமுறுத்தும் சமூகம்தான் "இறுதியில் ஆண் குறி காவு" கேக்கும்.

ஆண்களுக்கு "இறுதி தண்டனை" பற்றி மட்டும் முடிவெடுத்து தண்டனைக்குள்ளாக்கி, குற்றம் சாட்டப்படாத ஆனால் அகப்படாமல் பாலியல் வல்லுறவு கொள்ளும் எஞ்சிய ஆண்களை இன்னும் பாதுகாக்கத்துடிப்பதின் அரசியல் நமக்கு சொல்லாமல் சொல்வது மிக எளிய கருத்து "நாங்கள்இன்னும் இந்த சமுகத்தை ஆணாதிக்க சமூகமாக மட்டுமே இருக்க விடுவோம் என்பதுதானே தவிர வேறொன்றுமில்லை!!!!

அதாவது இச்சமூகம் பெண்கள் தன் கற்பை??!! பாதுகாத்து வைக்க வேண்டும், மீறி ஆணால் அதற்க்கு பங்கம் விளைவித்து அது வெளியே தெரிய வந்தால் மட்டும் அவனுக்கு தூக்கு தண்டனைதந்து கதையை முடித்து விடுவது!!!

பின் எப்போதும் போல் ஆண் தனது மனதின் இருண்ட பக்கங்களின் வக்கிரங்களில் கவலைப்படாமல் ஈடுபட்டுக்கொள்ளலாம்,தெரிய வந்ததொரு அசூசையான தினத்தில் மற்ற ஆண்களும் அவனுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அகப்பட்ட ஆணின் தலையையோ அல்லது ஆண்குறியையோ பாதிக்கப்பட்ட "பெண் தெய்வத்தின்" ??!! முன் படையலாக்கலாம்!!!!

No comments:

Post a Comment