31-12-2013
"நினைவுபடுத்துதல்"மிக வலிமை மிகுந்ததொரு செயல், வலிமை தேவைப்படும் ஒரு செயல்.
"நினைவுபடுத்துதல்" நிர்வாணமாவதற்க்குச்சமம்,
நினைவுபடுத்துதல் பல அதிர்வுகளை அசூசைகளை, அதிர்ச்சிகளை ஏற்ப்படுத்தவல்லது,
என்னை நினைவுபடுத்தி, என்னையே படித்துக்கொண்டிருக்கையில், உண்மையின் உக்கிரத்தன்மையின் வெம்மையில், என்னையே என்னால் எதுவும் தண்டிக்கமுடியவில்லை,
அப்படியே தண்டித்தாலும் ஏதோ சம்பிரதாயத்திற்க்காகத்தானிருக்கும் என்றெண்ணி தண்டிக்க முயலவில்லை.....
ஒருவேளை நினைவுபடுத்தலென்பதே மிக கொடிய தண்டனை என்பதால் கூட இருக்கலாம்.
என்னை நானே "நினைவுபடுத்துதல்"
கண்டிப்பாக என்னையே நான் மீள் ஆய்வு செய்ய உந்திதள்ளியதாகவேயிருக்கிறது,.
பொலிவாய் இருப்பதாய், நேர்மையாய் இருப்பதாய்,வெறும்பகட்டுடன்,போலித்தனத்துடன் இருப்பதாய் எனக்கு நானே உடுத்திக்கொண்ட அனைத்து அடையாளங்களையும் கலைத்து போட்டு விட்டது.
நேர்மையாய் இருப்பது தான் மிக கடினம் என்பது எனக்கு தெரியும்....
ஆனாலும் என்னை, நான் அடைந்து இருக்கும் "சமூக பொருளாதாரநிலையை" தக்க வைத்துக்கொள்ள, நான் செய்யும் பல "நேர்மையற்ற செய்கைகளை,
"தக்கன பிழைத்தல்" எனும் ஒரு சின்ன வரியில் தாண்டி சென்றுவிடுகிறேன்.
கேவலமாகத்தான் இருக்கிறது!!!!!
நினைவு படுத்துதலில், எனக்குச்சிக்கிய,"எனதும்" "என்னுடையதுமான" பல நினைவுகளின் மேல் வீசிய மிக கேவலமான நாற்றத்தை என்னாலே தவிர்க்க தாங்க இயலவில்லை......
என் மீதே காறி உமிழ முடிவதில்லையென்பதால், சில சமயம் கண்ணாடி மீது உமிழ்ந்திருக்கிறேன்......
கண்டிப்பாக நினைவுபடுத்துதல் ஒரு கொடிய தண்டனைதான்!!!!
No comments:
Post a Comment