Thursday, January 07, 2016

தோற்றப்பிழை உருவாக்கி -கருணாநிதி

வாழும் அரசியல் சாணக்கியர் கருணாநிதி, தேர்தலுக்கு முன்னதாகவே, தானும் தனது கட்சியான திராவிட முன்னேற்றக்கழகமும் மிக மோசமாக தோற்கப் போகிறோம் என்று தெரிய வரும் போது ஆளும் கட்சி ஜெயிக்கும் ஆனால் அது பெரிய வெற்றியாக இருக்காது என்ற மாயையை உருவாக்குவதும், போட்டி சம நிலையில் இருப்பதான சமயங்களில் தமக்கு ஒரு மாபெரும் ஆதரவு அலை வீசுவதாகவும்,   ஊடகங்களைக் கைக்கொண்டு தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடுவது என்பது ஜெயிக்கப் போகும் சீட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்கானதொரு உத்தியேயன்றி உண்மை நிலவரமல்ல.

இந்த குயுக்தியை கருணாநிதியும் அவரின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சமூகவலைத்தள பிரமுகர்களும்,தொடர்ந்து ஒரு பொய்யான மாயக்கருத்தை தொடர் பரப்புரை செய்து வருவதினால் மக்களை ஒரு ஆழ்மன குழப்ப நிலைக்குள் தள்ளி அக்குழம்பிய குட்டையில் ஓட்டுப்பொருக்கலாம் என்று திடமாக நம்புகிறார்கள்.

தமிழக அரசியலை உற்று நோக்கி ஓரளவிற்க்கு அரசியல் கள நிலவரங்களை சரியாக கணிக்கும் அரசியல் பார்வையாளர்களை கூட இக்குழப்பத்தில் தள்ளி ஏதோ ஆளும் கட்சி மிக மோசமானதொரு தோல்வியை சந்திக்க இருப்பது போல் எண்ண வைப்பதில் கருணாநிதியின் அரசியல் சாதுரியம் சாபாஷ் போட வைக்கும்.

ஆளும் கட்சியின் பலவீனங்களை சாதகமாக்கிக்கொண்டு அதன் மூலம் கூட்டணி பேரம் பேசி, இதயத்தில் இடமளித்து தனது குடும்பத்தினரின் அதிகார விஸ்தரிப்புசெய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் கருணாநிதி.

இதைத்தான் தனது கழக உடன்பிறப்புகளுக்கும், தமது ஊடக உடன்பிறப்புகளான விகடன் குழுமம், ஒன் இந்தியா குழுமம் போன்றவைகளுக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார் போல,

ஈழத்தைக்கொன்று, திராவிடக்கொள்கையை அழித்து, 2ஜியை மறைத்து,தனது குடும்பத்தை வளர்த்து,வெறும் அல்லது குறைந்த பட்சம் "Perception creation" செய்தாவது இம்முறை ஆட்சிப்பீடத்தில் அமரத்துடிக்கும் கருணாநிதியின் இறுதி ஆசை நிறைவேற எல்லாம் வல்ல பெரியாரை வேண்டித்தீர்ப்போம்


No comments:

Post a Comment