இன்றைய தமிழக அரசியல் சூழல், சென்னை மற்றும் கடலூரில் ஏற்ப்பட்ட இயற்கைப் பேரிடருக்குப்பின் வெகுவாக மாற்றம் கண்டுவருகிறது.
ஆளும் அ இ அ தி மு விற்க்கு எதிரான மன நிலை தலை நகரிலும் மாநிலத்தின் இன்ன பிற நகரங்களிலும் உருவாகியிருக்கிறது.
அரசும் அரசு இயந்திரங்களும், அரசின் தலைவரான தமிழக முதல்வரும் சரியான முறையில் மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதே ஆகப்பெரிய குற்றச்சாட்டு, இதை சரி செய்யலாம் என அரசு முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை, வாட்ஸ் அப் செய்தியும் காலங்கடந்த செயற்கையான கரிசனத்துடன் கூடிய ஒரு அறிக்கையாகத்தான் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டதே தவிர முதல்வரால் சரியா மக்களின் உணர்வுகளை தொட முடியவில்லை!!!
இச்சூழல், அ இ அ திமுகவுக்கு கடுமையான சரிவையும் திமுகவுக்கு பெரிய நம்பிக்கையையும் இது தந்திருக்கிறது.
ஆனால் மக்கள் வெறுத்திருப்பது , எதிர்ப்பது, மாற்றவிரும்புவது இரு பெரும் கழகங்களை மட்டுமல்ல. குறிப்பாக அவர்களின் ஊழலையும் வாரிசு அரசியலையும் அவற்றினூடாக உருவாகியுள்ள சீரழிவுக் கலாச்சாரத்தையும்தான்.
பெரும்பாலான மக்கள் திமுக, அதிமுகவின் இலவசங்களை வெறுக்கவில்லை.
இவ்விருக்கட்சிகளும் ஒருபக்கம் கொள்ளையடித்துக்கொண்டே மறுபக்கம் மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருப்பதற்காக உருவாக்கிய மக்கள் நலத் திட்டங்களை மக்கள் ஏற்கவே செய்கிறார்கள்.
தமிழக மக்கள் காங்கிரசையும் பாஜகவையும்விட திமுகவுக்கும் அதிகமுகவுக்குமே அதிக ஆதரவு தருவார்கள். ஆனால் இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக நல்ல மாற்று கிடைக்காதா என்று மக்கள் ஏங்குகிறார்கள்.
குறைந்தபட்சம் மக்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்க்கும் மாற்றாக தற்போதைக்கு யாரையும் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு நிறைவேறாக்கனவாகவே இருக்கும்.
மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையையும் பலர் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அம்மாற்றம் கருணாநிதி, ஜெயலலிலதா ஆகியோரின் அரசியல் காலத்துக்கு பிறகாகத்தான் இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம்.
எனவே, இம்முறையும் திமுகவோ அல்லது அதிமுகவோ தான் ஆட்சி அமைக்கும் என்பது நிதர்சன உண்மை, ஆனால், யாருடன் கூட்டணி அல்லது யாருடன் கூட்டணி இல்லை என்பதை பொறுத்தே இம்முறை வெற்றி வாய்ப்பு அமையும்.
இவ்விரு கழகங்களுக்கும் மாற்று என்கிற அடிப்படையில்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாகியது. ஆனால் இரண்டு பெரிய கழகங்களுக்கு எதிராக சரியான மாற்றை வைத்து வளர்வதற்கு பதிலாக அவர்கள் இப்போது குறுக்குவழியையும் அரசியல் கணக்குகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார் என்றும் அவரே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அவர்கள் விஜயகாந்தை முன்னிலைப்படுத்த முடிவுசெய்திருப்பது உண்மையென்றால், பாதிப்பு இரு பெரிய கட்சிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பிரச்சனை என்றாலும், திமுக விற்கே பாதிப்பு அதிகம்.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தும் இணைந்தார் எனில், அ இ அ தி மு க அதிக இடத்தையும், அதற்க்கு அடுத்த இடத்தை மக்கள் நலக்கூட்டணியும் மூன்றாம் இடத்தை திமுக வும் எடுப்பதற்க்கான வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறான ஒரு நிலை வரின், அ இ அ தி மு க, பாஜக வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடலாம், அவ்வாறு கூட்டணி அமைந்தாலும் அதுவும் அ இ அ தி மு க விற்க்கே அதிக வாய்ப்பாக இருக்கும் ஏனெனில், பாஜகவிற்க்கு தமிழகத்தில் தன் காலூன்ற வேண்டிய கட்டாயமிருப்பதால் தனது ரத கஜ படைகளுடன் முழுமூச்சுடன் வேலைபார்க்கும்.
தேர்தல் முடிந்ததும், தொங்கு சட்டசபையோ அல்லது யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழலோ ஏற்ப்பட்டால்,
மக்கள் நலக்கூட்டணியை,அ இ அ தி மு க + பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கக்கூடிய வகையில் நிர்பந்திக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது, விஜயகாந்த் பாஜக விற்க்காகவும், வைகோ அ இ தி மு க விற்க்காகவும் இதை மறுக்காமலுமிருப்பர்.
திருமாவிற்க்கு சற்றே சங்கடமேற்ப்பட்டாலும் , கூட ....
அ இ அ தி மு தனித்து போட்டியிடும் என்றே அறிவித்து வருகிறது. ஆனாலும் வெள்ளச்சூழலுக்கு பின்னால் அவ்வாறான ஒரு சூதை ஜெயலலிதா எடுப்பாரா என்பது சந்தேகமே....!!!
இறுதியாக ஒரு யதார்த்தக்கற்பனை...
நான்முனைக்கூட்டணி!!!
அ இ அ தி மு க +பாஜக+உதிரிகள் =
திமுக+விஜயகாந்த்+காங்கிரஸ்=
மக்கள் நலக்கூட்டணி=
பாட்டாளி மக்கள் கட்சி=
இவ்வாறாக அமைந்தால் ஒரு தொங்கு சட்டசபை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது!!!!!!
நாட்கள் இன்னும் அதிகமில்லை, ஜனவரி மாத இறுதிக்குள் அனேகமாக அனைத்து கட்சிகளும் திட்டங்கள் தீட்டி ஆயத்தமாகிவிடுவர்.
பிப்ரவரி முழுவதும் கூட்டணி பேரங்கள் நடக்கத்தொடங்கி விடும்....
முடிவெடுக்க முடியாதவர்களின் ஓட்டுக்கள்த்தான் இம்முறை ஆட்சியமைப்பவரை தீர்மானிக்கும் எனவே எனது கணிப்புபடி,
அ இ அ தி மு க முதல் இடத்தையும்
திமுக இரண்டாம் இடத்தையும்
பிடிக்கும்,
இவர்களில் யாருக்கு "swing voters" ஓட்டளிப்பார்களோ அவர்களே கோட்டைக்கு செல்வார்கள்!!!!!

No comments:
Post a Comment