2016 தமிழக சட்டமன்றத்தேர்தலை ஒட்டி எழுதியது!!!!.
இன்றைய இளைய தலைமுறை (18-25வயதிற்க்குட்பட்டவர்கள்)காலையில் எழுந்தவுடன் கடவுளைத்தொழுவது போல தங்கள் கைத்தொலைப்பேசிகளில் தான் விழிக்கின்றனர்!!!
இவர்களுக்கு அனைத்து வகையான செய்திகளும், தங்கள் கைத்தொலைபேசியிலேயே கிடைத்துவிடுகின்றன.
இந்த வயதிற்க்குட்பட்டவர்கள், தங்கள் கருத்துகளின் மூலமாக தங்களை சுற்றியுள்ளவர்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும், பல சமயங்களில் தொலைக்காட்சி,செய்தித்தாள்களின் கண்ணோட்டத்தையே மாற்றவல்லவர்களாக இருக்கிறார்கள்!!!
இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்னர் 13-18 வயதுதான் இருந்திருக்கும், எனவே இவர்களுக்கு கடந்த தேர்தலில்,இன்றைக்கு இருக்கும் அரசியல் அனுபவமோ, அல்லது செய்திகளை திறனாய்ந்து அறியும் திறமையோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் இவர்கள் "டெக்னாலஜி" என்பது, வெறும் கருவிதான்,மற்ற மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் போல மட்டுமே,அதற்க்காக அதில் வருபவவற்றையெல்லாம் உண்மையென நம்பி பிதற்றுபவர்கள் அல்ல.
கையில் எப்பொழுதும் செல்லும் டேப்பும், லேப்டாப்புமாக இருப்பதால், அத்தகைய தகவல் தொடர்புச்சாதனங்கள் ஊடாக இவர்களை தொடர்பு கொண்டால், இந்த இளைய தலைமுறை டிஜிட்டல் வாக்காளர்களை எளிதில் சந்திக்க முடியும், அவ்வளவுதான்.
ஆனால் இன்று,(சமூக ஊடகங்கள்(சோஷியல் மீடியா)தான் 2016 தமிழக சட்டமன்றத்தேர்தலின் டிஜிட்டல் மேடை, டிஜிட்டல் சுவர், டிஜிட்டல் கட் அவுட், இன்னும் சொல்லப்போனால் இந்ததேர்தல் ஒரு டிஜிட்டல் யுத்தகளமாய் மாறியுள்ளது!!!
மரணகலாய் மீம்ஸில் தொடங்கி வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியும் புத்தம்புது தொழில்நுட்பங்களில் " உள்ளேன் ஐயா" சொல்கின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகளின் இந்த சோஷியல் மீடியாவின் பின்னால் தவமாய் கிடப்பதற்க்கு முக்கிய காரணம் அந்த சமூக ஊடகங்களில் " "டாப்படிக்கும்"ஒரு கோடி இளைய தலைமுறையின் வாக்குகள்'.
இதுவரை நம் நாட்டில் ஓர் அரசியல் கட்சியின் வாக்குவங்கி என்பது, முதலில் தொண்டர் பலம்,அடுத்தது சாதி ஓட்டுக்கள்,அதற்கு அடுத்தது பண பலம். இப்படித்தான் இதுவரையிலான தேர்தல்களை அரசியல் கட்சிகள் எதிர்கொண்டு வருகின்றன.
இப்போது இப்புதிய இளம் வாக்காளர்களைக் குறிவைத்தும் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றன.
"டிஜிட்டல் மீன்களை இந்த சமூகவலையில் தான் பிடிக்க முடியும்
கழகங்களை ஒரு நிறுவனமாகவும் அதன் தலைமையை ஒரு ப்ராடக்டாக, "பிராண்ட்" ஆகவும் மாற்றி சோஷியல் மீடியாவில் இறங்கி விளம்பரம் செய்வது, ஜிஃப் வீடியோ,ஹேஷ்டேக்,மீம்ஸ், வைரல் வீடியோ எனப் பிரசார ஸ்டைலை மாற்றுவது, என இளைஞர்களின் மனம் கவர் வதற்காக எல்லாவிதமாகவும் முயற்சிசெய்கிறார்கள்.
இந்த டிஜிட்டல் யுக வாக்காளர்களின் மனதை தங்கள் பக்கம் மடை மாற்றி வாக்குகளாக மாற்ற அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்!!!
ஆனால் இளைஞர்கள், அவற்றையும் கிண்டல்செய்து மீம்ஸ் போட்டு, ஸ்டேட்டஸ் போட்டு கலாய்த்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுகிறார்கள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் இந்த புதுத்தலைமுறையை தமக்கான வாக்கு வங்கியாக்க முயற்சிகளில் மும்முரமாகின்றன.
ஏனெனில் பழைய ஊடக வரைமுறை போல் சமூக ஊடகங்கள் "ஒரு வழித்தடமல்ல", நமக்கு சொல்லப்படும் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்க...!!!!
சமூக ஊடகங்கள் பல்முனை அல்லது பல்வழிச்சாலை இங்கு பதியப்படும் ஒரு வரிக்கு ஓராயிரம் மக்களிடமிருந்து ஒரு லட்சம் வழியில் ஒரு கோடி வரிகளில் கருத்துக்கள் வரும்!!!
எனவே இவர்களை இந்த புதிய டிஜிட்டல் ஊடகங்களில் சந்திக்க செல்வதென்பது ஒரு "கொரில்ல போர் யுக்திக்கு"ஒப்பானது. இவர்கள் எங்கிருக்கிறார்கள், எந்த விதமான ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள், எப்போது எவ்வாறு தாக்குவார்கள் என்பது தெரியாது!!!
உலகம் முழுவதிலும் இன்று தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சமூக வலைத்தளங்கள் மூலமான தேர்தல் பரப்புரை அரசியல் தளத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.
ஃபேஸ்புக்கில் மட்டும் ஒன்றேகால் கோடி பயனாளிகள் இருக்கின்றனர்.
வாட்ஸப்பில் ஒரு கோடி பயனாளிகள் இருக்கின்றனர்.
இன்று செய்திகளை முதலாக முந்தித்தருவது சமூகவலத்தளங்களே ஆகும் அதில் நல்லதும் கெட்டதும் பரவிக்கிடக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது.
தீயசக்திகளும் குள்ளநரிக்கூட்டங்களும், விஷம செய்திகள் பரப்பி, தனிநபர் தாக்குதல் நடத்துதல், ஃபோட்டோஷாப்பில் புகைப்படங்களை மாற்றி குழப்பம் விளைவித்தல், பெரிய பெரிய பிராண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிகளின் உதவியுடன் புதுமையான, தமிழக அரசியல் சூழலுக்கு அறிமுகமில்லாத திட்டங்கள் தீட்டி இதே சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த டிஜிட்டல் யுக இளைஞர்கள் அனேகருக்கு இது முதல் முறை தேர்தலாக இருக்கும்,எனவே அவர்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் பற்றி மிகப்பெரிய கருத்து இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் இப்புதிய தலைமுறைக்கு வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்க்கான அரசு கடனுதவி, அரசு, மக்களுக்கான சேவைமையங்களில் சிங்கிள் விண்டோ அமைப்பு,நாட்டிற்க்கு தேவையான உள்கட்டமைப்புகள் என்று இவர்களின் தேவைகள் மிக வித்தியாசமானவை, நாடுடன் கூடிய சுய வளர்ச்சி எனச்சொல்லலாம்.
எனவே இவர்களுக்கு தேவையான உறுதிமொழிகளை இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களுக்கான மொழியில் இவர்களை விட்டே சொல்லச்செய்வதுதான் இந்த புதிய தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளாக மாற்ற முடியும்.
இந்த சமூக ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம்.
இச்சமூக வலைத்தளங்கள் இரண்டு முறையில் இயங்குகின்றன.
1, விலையில்லா விளம்பரங்கள், செய்திகள் பரிமாறுவது என்று,
2, விலையுடன் கூடிய விளம்பரங்கள் மற்றும் பிரச்சார வழிமுறைகள்.
விலையில்லா விளம்பரங்கள் மற்றும் மிகக்குறைந்த செலவில் சமூக வலைத்தளங்களில் மிகச்சிறந்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிறப்பான முறையில் பிரச்சாரங்கள் செய்து கொண்டு வருகிறார்கள்.
அதோடு,இச்சமூக வலைத்தளங்களில் கட்டணம் கட்டி பெறப்படும் விளம்பரச்சேவைகளில் அனேக நன்மைகள் உள்ளன.
1,மிக அதிகமான மக்களை மிகக்குறைந்த நேரத்தில் சென்றடைவது.
2, பூகோள ரீதியான நமக்கு தேவையான வாக்களர்களிடம் நமது பிரச்சாரங்களை கொண்டு போய் சேர்ப்பது,
3, வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் மக்களின் மனோநிலை, அவர்கள் அதிகமாக எந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை பார்வையிடுகிறார்கள் என்று துல்லியமாக கணித்து அதற்கேற்றார்போல் நமது பிரச்சார யுக்திகளை திட்டமிட உதவுவது என்று
பல நன்மைகள் இருக்கின்றன.
1, ஃபேஸ்புக்& ட்விட்டர் விளம்பரங்கள்:- ஒரு நாளில் குறிப்பிட்ட அளவிற்க்கான மக்களை, அவர்கள் மாவட்டம் சார்ந்த இடத்தில், அவர்களின் வயது மற்றும் பாலினத்திற்கேற்ப சென்றடைய சரியான வகையில் திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்துவது.
2, கூகுள் SEO:- அ இ அ தி மு க, திமுக, உதயசூரியன். இரட்டை இலை, அம்மா, கருணாநிதி போன்ற வார்தைகளை தட்டினாலே போதும் உடன் தத்தம் வலைத்தளமோ, ஃபேஸ்புக் பக்கமோ, தலைமையின் புகைப்படமோ முதல் பக்கத்தில், முதல் வரியில் வருவதற்கான செயல்பாடுகள்.
3,banner ads:- மிகப்பிரபலமான வலைத்தளங்களில் அவர்களின் முகப்புப்பக்கத்தில் நமது கழக விளம்பரங்கள், வீடியோக்கள், போஸ்டர்கள் போன்றவற்றை வரவைத்தல்.
4, நம்மை பற்றி தவறான செய்திகள் இணையதளத்தில் எந்த பக்கத்தில் இருந்தாலும் உடனடியாக அதை கட்டுப்படுத்தி, அதை சரிப்படுத்த தக்க பதிலடி கொடுத்து, நம்மைப்பற்றிய நல்ல செய்திகள் இணையதளத்தில் முக்கியமான பக்கங்களிலும் , முதல் பக்கங்களிலும் வரவைத்து நம்மை பற்றிய நல்ல செய்திகளை அனேகருக்கு கொண்டு செல்வது என்று இதன் பயன்கள் மிக அதிகம். இன்று பிரபலமான நிறுவனங்கள்,பிரபல மனிதர்கள், நிறுவனங்கள், என அனேகர் இது போல டிஜிட்டல் பிம்பங்களை கட்டமைக்கும் வித்தகர்களை தம்மிடம் வைத்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் தமது பிம்பத்தை சரியான முறையில் கட்டமைப்பது மிக மிக முக்கியத்தேவையாக இருக்கிறது. இதற்கான கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் இதனால் நமக்கு கிடைக்கும் பலன் மிக அதிகமாகும்.
5,youtube (skippable ads& unskippable ads)
உதாரணத்திற்க்கு
யூட்யூபில் பொதுமக்கள் தேடும் ஒரு காணொளிக்கு முன் வரும் ஒரு விளம்பரம் ( 20-30 நொடி) ஸ்கிப் செய்யக்கூடிய ஒவ்வொரு விளம்பரத்திற்க்கு 7-10 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது!!!
ஸ்கிப் செய்ய இயலாத ஒவ்வொரு விளம்பரத்திற்க்கு (20-30 நொடி) 15-20 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது!!!
மேற்கூறியவையெல்லாம், இன்றைய சமூக வலை மற்றும் இணையதள ஊடக அமைப்பில் மிக முக்கியமானதாகவும் இன்றியமையாததாகவும் இருக்கின்றது.
இவற்றை சிறப்பான முறையில் திட்டமிடலுடன் செய்து கொடுக்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் இயங்குகின்றன!!!
உலக தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒபாமாவே இத்தகைய சமூக ஊடகங்கள் மூலம் தனது பிரச்சார யுக்தியை வடிவமைத்தார் என்று சொல்லப்படுகிறது அது ஓரளவிற்க்கு உண்மையும் கூட, எம்மைப்பொறுத்தவரை 2016 தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் சமூக வலைத்தளங்கள் வந்த பின் நடைபெறப்போகும் முதல் பொதுத்தேர்தல்.... எனவே இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் பல லட்சம் வாக்காளர்களை அவர்களின் எண்ண ஒட்டங்களை துல்லியமாக கண்டறிந்து செயல்படுபவர்களுக்கு கணிசமான அளவிற்க்கான வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
சமூக ஊடகங்களும் அதில் இயங்கும் சமுதாயமும், மெய்யுலகிற்க்கும் மெய்நிகர் உலகிற்க்கும் அடிக்கடி கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் நவீன டிஜிட்டல் சித்தர்கள் இவர்களை சரியான முறையில் அணுகி அவர்களின் நம்பகத்தனமையை பெற்றால் வெற்றி நிச்சயம்!!!!
No comments:
Post a Comment