Wednesday, July 27, 2016

வைரமுத்துவும் வசப்படுத்தாமல் விட்ட வார்த்தையும்….


தனது வார்த்தைகளால் வானத்தையும் வசப்படுத்திட முடியும் என்று அகங்காரித்து இருந்த வைரமுத்துவிற்கு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாதாரண வார்த்தை கூட வசப்படாமல் வாரி விட்டதாம்.

ரஜினியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தாராம்.

நமக்கு அந்த காணொளியில் காணக்கிடைத்த அந்த காட்சியில் வைரமுத்து வசப்படுத்தாமல் விட்ட மொழியை விட அவரது "உடல்மொழி"தான் அசூசையாகப்பட்டது.

கவிஞரை தலைமையேற்க்க அழைத்த அந்த அரிமா சங்கத்தில் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருந்தும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் சமூக ஏற்றதாழ்வுகளை சமன் செய்யும் பொருட்டு கோட் சூட் போட்டுக்கொண்டு மறைவுப்பாதைகளிலிருந்து வெளிவருகின்றனர்.

அவர்களைப்பார்த்து தான்,அதே கோட் சூட்களை ரஞ்சித் ரஜினிக்கும் எடுத்து மாட்டி விட்டார் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்,
வைரமுத்துவின் இந்த நக்கலில் இருக்கும் வன்மத்தின் காரணத்தை அலசினால் ஏராளமாக இருக்கிறது.

கபாலியில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு கிடைக்கா காரணத்தினாலோ,
அல்லது,
மிக பிரயத்னப்பட்டு தலித்திய இளையராஜாவின் பிடியில் இருந்து தமிழ் சினிமாவை பார்ப்பன லாபி மூலமாக வெளிக்கொணர்ந்து இன்று சற்று கல்லாக்கட்டிக்கொண்டிருக்கும் தனது ”வணிக இருத்தல்” பறிபோய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவோ,
அல்லது சுயமரியாதை எனும் போர்வையில் தான் கட்டிவைத்திருந்த சுயசாதி அரிப்பு எனும் பூனை வெளியில் தவ்விக்குதித்து வெளியில் வந்ததாலோ
 
என்னவோ,
 
 மிக நுண்ணியமாக ,கோட் சூட் அணிந்த அனைத்து தலித்தையும் அது அரிமா சங்கத்தில் இருக்கும் தலித்தாக இருந்தாலும்,தலித் இயக்குனரான ரஞ்சித்தாக இருந்தாலும்,தலித்தாக திரையில் தோன்றிய ரஜினியாக இருந்தாலும் அனைவரையும் ஒரே நையாண்டி வார்த்தையால் குத்தி விட்டு,பிறகு பின்விளைவுகளைப்பற்றிய அச்சத்தில் ஒரேடியாக பின் வாங்கி நிற்கும் வைரமுத்து,” வார்த்தை வசப்படவில்லை என்று ஜல்லியடிப்பது அவர் முகத்தில் அவரே சாணி அடிப்பதற்க்கு சமம்.

கவிதையென்பது சமூகத்தின் பால் அக்கறையும் அன்பும் கருணையும் பெருங்கோபமும் கொண்டு எழுதுவது.பெருங்கோபம் சமூகத்தில் நடக்கும் அநீதியைக்கண்டு எழுதுவது.
ஆனால் நமது கவிப்பேரரசுக்கு தனது கல்லாவிலும்,தனது வணிக இருத்தலிலும் ஏற்ப்பட்ட ஏற்ப்படவிருக்கிற இல்லாமை குறித்த அச்சத்தில் எடுத்த வாந்தியை வார்த்தையின் மீது பாவத்தை போட்டு தன்னை புனிதப்படுத்திக்கொள்கிறார்!!!!

No comments:

Post a Comment