இதுவரை
நான் எழுதாத
கவிதையொன்று
இன்னும்
வார்த்தைகளற்றுத்தான்
இருக்கிறது!!!
வார்த்தைகளற்று
இருப்பதைத்தான்
அக்கவிதையும்
விரும்புகிறது!!!
ஆனாலும்
வார்த்தையாக்கிய
பின் தான்
முழுமை
பெறுவாய்
எனச்சொல்லி
பார்த்தேன்.
முழுமையான
பின் தான்
கவிதையானேன்,
எழுதுவது
என்பது உன்
அகங்காரத்தின்
வெளிப்பாடே தவிர
என்னுடையதல்ல
எனச்சொல்லி
ஞானமா(க்)கியது!!!
பி.கு:-
கண்டவர் விண்டிலர் என்பதற்க்கான மற்றுமொரு தத்துவ விசாரணையாக மேலே எழுதப்பட்டுள்ள உரைநடைக்கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.
இங்கே கவிதை என்பது நமது ஆன்மாவை குறிக்கிறது!!!
ஆன்மா என்பது வார்த்தைகளற்றுதானிருக்கிறது!! ஆனால் அதை வார்த்தையாக்கினால்தான் அனைவருக்கும் புரியும் தெரியும் என்றதொறு மாயையில் நமது மனம் நம்மை குழப்புகிறது.
அக்குழப்பத்தில் ஆன்ம விசாரணை செய்கின்ற பொழுது ஆன்மா நம்மிடம் சொல்வதாக புனையப்பட்டது இக்கவிதை!!!
-நடுநிசிச்சித்தர்-
No comments:
Post a Comment