Thursday, May 28, 2009

கையாலாகாதவர் அனைவருக்கும்.....

இன்று நிறுத்தி விடுவார்கள் போரை, நாளை நிறுத்தி விடுவார்கள் என்று பச்சை குழந்தையாய் விழி நிறுத்தி ஈழம் பார்த்திருந்தோம்.

இன்று தலைவர் பாரிய படைஎடுப்பை நிகழ்த்துவார்!!!!
இன்று விடுதலைபுலிகள் மிகப்பெரிய அழிவை தடுத்துவிடுவர் என்று ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி சார் இணைய பக்கங்களை கவனமாக பார்த்துக்கொண்டு இருந்தோம்.

தமிழக தலைவர்கள் ஆகபெரிய போராட்டம் ஒன்றை கையிலெடுத்து இந்திய வல்லாதிக்க அரசை நைய புடைப்பர் என்று கனவில் தீ வளர்த்து காத்து இருந்தோம்.

புலம் பெயர்ந்தோர் எப்படியாவது எந்த உலக நாடையாவது எப்படியாவது சமரசம் செய்ய வைத்து விடுவர் என்று கை பிசைந்து காத்திருந்தோம்.

தாய் தமிழக மக்கள் எப்படியாவது தமது ஒட்டு பிரம்மாஸ்திரத்தை சாதகமாக பயன்படுத்தி மனித படுகொலையை தமது ரத்தங்கள் சிந்துவதை தடுத்து நிறுத்துவர் என்று கடவுளாக எண்ணி காத்திருந்தோம்.

செய்தி என்னவோ மிக கசப்பாகத்தான் இருந்தது அனைவரிடமும் இருந்து......

இவை எல்லாவற்றை காட்டிலும் நம்பவே முடியாதே ஒரு பெரிய அடி தலைவரிடம் இருந்து/தலைவரை பற்றி .வந்தது.

இனி யாரிடம் நம்பிக்கை வைப்பது????

எவரை நம்புவது????

எதை நம்புவது?????

அனைவரும் சேர்ந்து எம்மை அனாதைகளாக ஆக்கிவிட்டனர்.

அனைவரும் சேர்ந்து நம்மை கைவிட்டுவிட்டார்கள்.

அனைவரும் சேர்ந்து நமது உணர்வுகளை நசுக்கி விட்டார்கள்.

அனைவரும் சேர்ந்தது இத்தனை நாள் நாம் பட்ட அத்தனை துக்கங்களையும் சோகங்களையும் சிந்திய ரத்தங்களையும் தாரை வார்த்த உறவுகளையும் உயிர்களையும் மிக கேவலப்படுத்திவிட்டனர்.

அனைவரும் சேர்ந்து நம்மின் எதிர்காலத்தை கர்ப்ப பையிலேயே கலைத்து விட்டனர்.

அங்கு ஈழத்தில் இருக்கும் எமது உறவுகள் அனைவரையும் கட்டி பிடித்து அழ வேண்டும் போல உள்ளது.

யாருமே இல்லாத அனாதைகளாக போய்விட்டோமே என்று எனது உயிர் ஒழுக அழுக வேண்டும் போல இருக்கிறது.

எனது சொந்தங்களை போலவே நானும் அனாதையாய் தான் நிற்கின்றேன், அனாதையாய் என்பதை விட கையாலாகாதவனாகத்தான் இருக்கிறேன் என்று கை பிடித்து சொல்லவேண்டும் போல இருக்கிறது,

மனசிதைவின் விளிம்பிர்க்குள் என்னை நானே தள்ளி கொண்டு போய் இறுதியில் மனநோயாளியாக மாறி ஈழத்திற்காக அழுது அழுது செத்துவிடுவேனோ என்று தோன்றுகிறது.

புலிகளை பயங்கரவாதியாக சித்தரித்தீர்கள் சரி!!!!!!
தமிழ்நாட்டிலே இத்தனை பிரச்சனை இருக்கிறது உனக்கு ஈழ பிரச்சனை தான் பெரிய பிரச்சனையா என்று நயவஞ்சகம் காட்டினீர்கள் சரி!!!!

ஆயுத புரட்சி எல்லாம் சரிபடாது,அரசியல் ரீதியான பாதைதான் சரி என்றீர்கள் அதுவும் சரி.......

பிரபகாரன் தான் கொடுங்கோலன் என்றீர்கள் அதுவும் சரி......

நாம் ஆயுதம் தரவில்லை என்றால் சீன கொடுத்து கொன்றுவிடும் அதற்க்கு நாமே கொன்றுவிடுவோம் என்று வஞ்சம் தீர்த்தீர்கள் சரி......

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று மறுத்தீர்கள் சரி!!!!!

ஒரு குடும்பத்தின் பழி அறுப்பிர்க்கு ஒரு இனத்தையே கொன்று குவித்தீர்கள் சரி!!!
மரண புதைகுழியில் இருப்பவர்களிடம் மனித நேயம் பேசி கதைத்தீர்கள் சரி
எல்லாம் சரி......

அங்கு இருக்கும் ஒரு குழந்தையின் ஒரே ஒரு கேள்விக்கு உங்களிம் பதில் இருக்குமா ???

மனிதம் என்றால் என்ன????

No comments:

Post a Comment