Thursday, May 28, 2009

தமிழின தலைவரை கொச்சை படுத்தும் அனைவருக்கும்

எமது இனத்திற்காக தமிழின தலைவர் போராடவில்லை என்று யார் சொன்னது?????

எமது இனத்தின் மீதும் எமது சனத்தின் மீதும் இந்திய வல்லாதிக்கம் தமது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வன்கொடுமை புரிந்து கொண்டு எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பொழுது,

எமது தமிழன தலைவர் தமது உடல் நலக்குறையை கூட பொருட்படுத்தாது தமது படை அணிகளுடன் தலைநகர் சென்று நடுவண் அரசிற்காக தமது குடும்பத்தின்,தமது சொந்த ரத்தங்களை கூட தம்மினத்திற்க்காக அவர்களின் அமைச்சரவைக்கு தாரை வார்த்து கொடுத்திட கூட தயாராக இருந்த தமிழின தலைவரின் தியாகத்தை அவரின் இன உணர்வை எத்தனை தான் கொச்சை படுத்தி அவதூற செய்தாலும் அவற்றை தமது இனத்திற்காகவும்,தன் சனத்திர்க்காகவும் சகிப்புத்தனமையுடன் பொறுத்துக்கொண்டு கலங்காத கலங்கரை விளக்காக,

தமிழகத்தின் உரிமை போராட்டத்திற்காக தனது மூத்த மகன்,மருமகன்,தமது மகள்,தமது மகள் குடும்பத்திற்கு எல்லாமுமாய் இருக்கும் ராசா என்று அனைவரையும் தம்முடன் சமராட தில்லி களத்திற்க்கு அழைத்து சென்ற அந்த வீரமகவின் போர்க்குணத்தை என்னவென்று சொல்ல.....????

எதிரிகளின் போர் தந்திராபோதையங்கள்???? அனைத்தையும் தகர்த்து எரிந்து தமது உறவின் உயிரை காக்க உரிமை காக்க தன சொந்த உறவான மகன் மருமகன்கள்!! மகள் என்று அனைவரையும் இந்திய வல்லாதிக்க அமைச்சரவைக்கு தாரை வார்த்து சமரில் வெற்றி கொண்ட எம்மின தலைவனை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment