Showing posts with label கபாலி. Show all posts
Showing posts with label கபாலி. Show all posts

Friday, August 05, 2016

கபாலியும் குறியீடும்!!!

கபாலியும் குறியீடும்!!!

கபாலி விமர்சனம் எழுதவில்லையென்றால் சாதியை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள் என்றிருக்கும் தமிழ்ச்சூழலில், நிறைய விமர்சனம் வந்துவிட்டதாலும் கபாலி படத்தில் உள்ள குறியீடுகளை பற்றி அலசி ஆராயலாம் என்ற சிற்றின்பப்பேராவலில் யாம் உணர்ந்தவைகள்( இதை இயக்குனர் ரஞ்சித்தே உணர்ந்திருப்பாரா என்று யாமறியோம்)

குறியீடு 1:-

இறுதிக்காட்சியில், கிழ டானின் 100 வது பிறந்த நாள் பார்ட்டி நடக்கும் அந்த திறந்த வெளி தளம் ஆவிடை குண்டத்தைப்போலவும் அதில் எரியும் நெருப்பு போல அமர்ந்திருக்கும் லிங்கம் போல கபாலியும் அமர்ந்து இருப்பது மிக முக்கியமான குறியீடாக நாம் காண்கிறோம்!!! இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். 
எனவேதான் படத்தின் கான்ஸப்டே நெருப்புடா என்றும் குறியீட்டால் உணர்த்தி இருக்கின்றனர்!!

குறியீடு 2 :-
ராமாயணத்தில் ராமன் 25 வருடம் வனவாசம் சென்று பின் சீதையைத்தேடி இலங்கை சென்றது போல , ரஜினியும் தம் மனைவியை தேடி அழைகிறார், என்ன ராதிகா ஆப்டே  அசோகவனத்திற்க்கு பதில் ஏதோ வெள்ளைக்கார கார்டனில் இருக்கிறார். அனுமான் போலவே கபாலிராமனிடம் " கண்டேன் சீதையை என்று ஒரு நவீன வாலில்லா குரங்கு சொல்கிறது!!! 



குறியீடு 3 :- 

நெருப்புடா பாடல் மிக வேகமாக நெருப்பாய் பற்றிக்கொண்டு பட்டையை கிளப்புகையில் திடீரென்று பாடலின் சுதி சற்றே குறைந்து பின் ரஜினி மகிழ்ச்சி எனச்சொல்வதில் இருந்தே ரஞ்சித் இது ரஜினி படம் அல்ல என் படம் இப்படத்தில் ரஜினி எல்லாவற்றையுமே சற்று மெதுவாகத்தான் செய்வார் என்று குறீயீட்டால் உணர்த்துகிறார்!!!

குறியீடு 4:-

ரஜினியின் நண்பராக கூடவே இருக்கும் தோழர் அமீர் அழகிய நரைகூடிய குறுந்தாடியுடன் திருமா போல உருவமைப்பு கொண்டிருக்கிறார். எனவே இது கண்டிப்பாக தலித்திய சினிமா தான் என்று குறியிடுகிறார்.

குறியீடு 5 :-

வெளிநாட்டில் தமிழருக்காக குரல் கொடுத்து தலைவனாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நேசன் புலித்தலைவர் பிரபாகரனை நினைவுப்படுத்திகிறார்!!

தமிழ்நேசன் பெரியாரையும் நினைவுபடுத்தி, அவருக்கு பின் அவர் மகன் தமிழ்மாறன் (சம்பத்தையும் ) பின் தள்ளி கபாலி  தலைமைப்பொறுப்பை கைப்பற்றுவது ( அண்ணாவைத்தாண்டி விட்டிருக்கிறார்கள்) கருணாநிதியையும் நினைவுப்படுத்துகிறது!!

குறியீடு 6 :- 

உள்ளூர் ஆண்டைகளின் கதை முடிக்க கோட் சூட் போட்ட கபாலீஸ்வரன், உலக ஆண்டையான "டாங் லீ" யின் கதை முடிக்க தனது பெயரை " கபா லீ" என மாற்றியுள்ளதும் ஒரு முக்கிய குறியீடு !!!

Wednesday, July 27, 2016

வைரமுத்துவும் வசப்படுத்தாமல் விட்ட வார்த்தையும்….


தனது வார்த்தைகளால் வானத்தையும் வசப்படுத்திட முடியும் என்று அகங்காரித்து இருந்த வைரமுத்துவிற்கு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாதாரண வார்த்தை கூட வசப்படாமல் வாரி விட்டதாம்.

ரஜினியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தாராம்.

நமக்கு அந்த காணொளியில் காணக்கிடைத்த அந்த காட்சியில் வைரமுத்து வசப்படுத்தாமல் விட்ட மொழியை விட அவரது "உடல்மொழி"தான் அசூசையாகப்பட்டது.

கவிஞரை தலைமையேற்க்க அழைத்த அந்த அரிமா சங்கத்தில் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருந்தும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் சமூக ஏற்றதாழ்வுகளை சமன் செய்யும் பொருட்டு கோட் சூட் போட்டுக்கொண்டு மறைவுப்பாதைகளிலிருந்து வெளிவருகின்றனர்.

அவர்களைப்பார்த்து தான்,அதே கோட் சூட்களை ரஞ்சித் ரஜினிக்கும் எடுத்து மாட்டி விட்டார் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்,
வைரமுத்துவின் இந்த நக்கலில் இருக்கும் வன்மத்தின் காரணத்தை அலசினால் ஏராளமாக இருக்கிறது.

கபாலியில் தனக்கு பாட்டெழுத வாய்ப்பு கிடைக்கா காரணத்தினாலோ,
அல்லது,
மிக பிரயத்னப்பட்டு தலித்திய இளையராஜாவின் பிடியில் இருந்து தமிழ் சினிமாவை பார்ப்பன லாபி மூலமாக வெளிக்கொணர்ந்து இன்று சற்று கல்லாக்கட்டிக்கொண்டிருக்கும் தனது ”வணிக இருத்தல்” பறிபோய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவோ,
அல்லது சுயமரியாதை எனும் போர்வையில் தான் கட்டிவைத்திருந்த சுயசாதி அரிப்பு எனும் பூனை வெளியில் தவ்விக்குதித்து வெளியில் வந்ததாலோ
 
என்னவோ,
 
 மிக நுண்ணியமாக ,கோட் சூட் அணிந்த அனைத்து தலித்தையும் அது அரிமா சங்கத்தில் இருக்கும் தலித்தாக இருந்தாலும்,தலித் இயக்குனரான ரஞ்சித்தாக இருந்தாலும்,தலித்தாக திரையில் தோன்றிய ரஜினியாக இருந்தாலும் அனைவரையும் ஒரே நையாண்டி வார்த்தையால் குத்தி விட்டு,பிறகு பின்விளைவுகளைப்பற்றிய அச்சத்தில் ஒரேடியாக பின் வாங்கி நிற்கும் வைரமுத்து,” வார்த்தை வசப்படவில்லை என்று ஜல்லியடிப்பது அவர் முகத்தில் அவரே சாணி அடிப்பதற்க்கு சமம்.

கவிதையென்பது சமூகத்தின் பால் அக்கறையும் அன்பும் கருணையும் பெருங்கோபமும் கொண்டு எழுதுவது.பெருங்கோபம் சமூகத்தில் நடக்கும் அநீதியைக்கண்டு எழுதுவது.
ஆனால் நமது கவிப்பேரரசுக்கு தனது கல்லாவிலும்,தனது வணிக இருத்தலிலும் ஏற்ப்பட்ட ஏற்ப்படவிருக்கிற இல்லாமை குறித்த அச்சத்தில் எடுத்த வாந்தியை வார்த்தையின் மீது பாவத்தை போட்டு தன்னை புனிதப்படுத்திக்கொள்கிறார்!!!!