கபாலியும் குறியீடும்!!!
கபாலி விமர்சனம் எழுதவில்லையென்றால் சாதியை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள் என்றிருக்கும் தமிழ்ச்சூழலில், நிறைய விமர்சனம் வந்துவிட்டதாலும் கபாலி படத்தில் உள்ள குறியீடுகளை பற்றி அலசி ஆராயலாம் என்ற சிற்றின்பப்பேராவலில் யாம் உணர்ந்தவைகள்( இதை இயக்குனர் ரஞ்சித்தே உணர்ந்திருப்பாரா என்று யாமறியோம்)
குறியீடு 1:-
இறுதிக்காட்சியில், கிழ டானின் 100 வது பிறந்த நாள் பார்ட்டி நடக்கும் அந்த திறந்த வெளி தளம் ஆவிடை குண்டத்தைப்போலவும் அதில் எரியும் நெருப்பு போல அமர்ந்திருக்கும் லிங்கம் போல கபாலியும் அமர்ந்து இருப்பது மிக முக்கியமான குறியீடாக நாம் காண்கிறோம்!!! இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார்.
எனவேதான் படத்தின் கான்ஸப்டே நெருப்புடா என்றும் குறியீட்டால் உணர்த்தி இருக்கின்றனர்!!
குறியீடு 2 :-
ராமாயணத்தில் ராமன் 25 வருடம் வனவாசம் சென்று பின் சீதையைத்தேடி இலங்கை சென்றது போல , ரஜினியும் தம் மனைவியை தேடி அழைகிறார், என்ன ராதிகா ஆப்டே அசோகவனத்திற்க்கு பதில் ஏதோ வெள்ளைக்கார கார்டனில் இருக்கிறார். அனுமான் போலவே கபாலிராமனிடம் " கண்டேன் சீதையை என்று ஒரு நவீன வாலில்லா குரங்கு சொல்கிறது!!!
குறியீடு 3 :-
நெருப்புடா பாடல் மிக வேகமாக நெருப்பாய் பற்றிக்கொண்டு பட்டையை கிளப்புகையில் திடீரென்று பாடலின் சுதி சற்றே குறைந்து பின் ரஜினி மகிழ்ச்சி எனச்சொல்வதில் இருந்தே ரஞ்சித் இது ரஜினி படம் அல்ல என் படம் இப்படத்தில் ரஜினி எல்லாவற்றையுமே சற்று மெதுவாகத்தான் செய்வார் என்று குறீயீட்டால் உணர்த்துகிறார்!!!
குறியீடு 4:-
ரஜினியின் நண்பராக கூடவே இருக்கும் தோழர் அமீர் அழகிய நரைகூடிய குறுந்தாடியுடன் திருமா போல உருவமைப்பு கொண்டிருக்கிறார். எனவே இது கண்டிப்பாக தலித்திய சினிமா தான் என்று குறியிடுகிறார்.
குறியீடு 5 :-
வெளிநாட்டில் தமிழருக்காக குரல் கொடுத்து தலைவனாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நேசன் புலித்தலைவர் பிரபாகரனை நினைவுப்படுத்திகிறார்!!
தமிழ்நேசன் பெரியாரையும் நினைவுபடுத்தி, அவருக்கு பின் அவர் மகன் தமிழ்மாறன் (சம்பத்தையும் ) பின் தள்ளி கபாலி தலைமைப்பொறுப்பை கைப்பற்றுவது ( அண்ணாவைத்தாண்டி விட்டிருக்கிறார்கள்) கருணாநிதியையும் நினைவுப்படுத்துகிறது!!
குறியீடு 6 :-

No comments:
Post a Comment