Tuesday, March 03, 2020

சொர்க்கஞ்செல்லும் சூட்சமம்

மோட்சமது பெறுவதற்குச் சூட்சமஞ் சொன்னேன் 
கேள்.... 

பாவமென்றேதுமில்லை அடித்துச்சுவைத்துண்ட பின் அனைத்தும் 
பசிக்குணவே.... 

வணக்கத்துக்குறியவனென்றெவனுமிலை 
உனைத்தவிர 
தினமும் கோவின் உள் செல்...

நீயே “கோ”...... 

சகப்ராணியிடம் 
காமத்தைத் தள்ளி 
காதல் கொள்ளாதே..... காமமேயியற்கை.....

வெற்றியென்றொன்றுமிலை 
உனது 
செயலனைத்தும்
இயக்கமேயிப்பிரபஞ்சமுமியக்கமே 
வெற்றிதோல்வி அதற்கல்ல....

சித்தமும் 
யோகமும் 
தவமும் 
ஞானமும் ஒன்றுமில்லை....
"ஒன்றுமில்லை" மட்டுமே 
உண்டு 
உணர்!! 

பாவபுண்ணியமேதுமில்லை ஆகின்
மோட்சமது பெறுவ தற்குச் சூட்சமமென்றேதுமில்லை
மல்லாக்கப்படுத்துப்பார்
சொர்க்கமதுவே...... 

No comments:

Post a Comment