Thursday, April 30, 2020

எதிரிகளைத் தேடித் தீர்ப்போம் வா....

உங்களுக்கான எதிரிகளை தேர்ந்தெடுங்கள்;
அவர்களை வெறுப்பதற்கான காரணங்களை கண்டுபிடியுங்கள்;

எதிரிகளின் எதிரிகளை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்;
எதிரிகளின் நண்பர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்;

எதிரிகள் பேசும் கருத்துகளை கவனியுங்கள்;
அவற்றில் இருக்கும் பிழைகளை பெரிதாக்குங்கள்;

எதிரிகளின் வரலாற்றை படியுங்கள், அதை உங்களுக்கானதாக மாற்றி எழுதுங்கள்;

எதிரிகளின் கொள்கைகளை கேளுங்கள், அவை ஆபத்தானது என்று பதிவு செய்யுங்கள்;

வாழும் வரை எதிரிகள் தேவை,

எனவே வளர வளர எதிரிகளை மாற்றிக்கொள்ளுங்கள்;

எதிரிகள் தவறு செய்யும்பொழுது அமைதியாக கவனிப்பது போல வேடிக்கை பாருங்கள்.

எதிரிகள் தோல்வி அடையும் பொழுது உண்மையாகவே வருந்துவது போல நடியுங்கள்.

அடிக்கடி எதிரிகளை அடிக்காதீர்கள்;

ஆனால் எப்பொழுதும் “முதல் அடியும்,இறுதி அடியும் “ உங்களுடையதாய் இருக்கும் படி கட்டமைத்துக்கொள்ளுங்கள்,

அதே நேரத்தில் அந்த அடி “அன்பினாலானதாய் “ இருக்கும்படி வடிவமைத்துக்கொள்ளுங்கள்.....

கொ.பி. 2020 களின் ஏப்ரல் மாதக்காலங்களில் வெளிவந்த 
“எதிரிகளைத் தேடி 
தேர்ந்தெடுத்துத் தீர்ப்போம் “ என்கின்ற போஸ்ட் பேண்டமிக் புத்தகத்திலிருந்து.......

(விரைவில் கிண்டலில்/ Soon In Kindle .......)

No comments:

Post a Comment