எனக்கு
காசுகொடுத்து
புணர்வதில்
கம்ப்யூட்டரின்
மெய்நிகராய்
புணர்வதில்
இயக்கமாய்
வெறும்விந்தை
வெளியேற்றும்
வித்தையில்
அச்சப்புணரலில்
அவசரப்புணரலில்
ஆவேசப்புணரலில்
அகந்தைப்புணரலில்
ஆசைகாட்டிப்புணரலில்
இப்படி
எப்படி
புணரினினும்
அது
எனக்கு
புணர்ச்சியேயில்லை,
புணர்ச்சிக்கு
முந்தையதொரு
காலமும்,
புணர்ச்சிக்கு
பிந்தையதொரு
காலமும்,
புணர்தாலாய்
நாமிருவரும்
மாறிய
அந்த ஒருநிமிட
காலமும்,
எனக்கு
அதீத
காதலையும்
அளவற்ற
காமத்தையும்
தருகிறது!!!
அஞ்ஞானமும்
மெஞ்ஞானமும்
விஞ்ஞானமும்
சத்-சித்-ஆனந்தமாய்
சங்கமிக்கும்
வா
அந்நொடியினை
தேடி
கண்டறிவோம்
No comments:
Post a Comment