(தேசிய அளவிலான தகுதி அறி நுழைவுத்தேர்வு) (National Eligibility Cum Entrance Test - NEET)
"நீட் மருத்துவ நுழைவு தேர்வு மசோதா" அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது!!!!
இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்க்கு ஒரே பொதுவான நுழைவு தேர்வு நடைபெறும்.
எதற்க்காக NEET ???
1,மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்,
2,கட்டாய நன்கொடையை ஒழிக்க வேண்டும்,
3,தகுதி (Merit) அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அமைக்க வேண்டும்,
4,மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக, ஏராளமான நுழைவுத்தேர்வுகளை எழுதும் கொடுமையிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் – இந்தக் காரணங்களைக் கூறியே ‘நீட்’ நுழைவுத்தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.
மேலோட்டமாக இதை பார்த்தால் மிகச்சரியானதொரு முடிவாக இருக்கும், ஆனால் இதில் இருக்கும் உள்ளீடுகளைப்பார்த்தால் மிக நுண்ணிய அரசியல் சதி வலை பின்னப்பட்டிருப்பதை நாம் அறியலாம்.
தமிழ்நாட்டில் அமையப்பெற்றிருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS ல் 85% மும் ,MD படிப்பில் 50% மும்
நுழைவுத் தேர்வுகள் ஏதும் இல்லாமலே மாநில அரசின் +2 மதிப்பெண்
அடிப்படையில் நம் தமிழக மாணவர்களுக்கே கிடைக்கும்படியான ஒரு எளிதான தேர்வு முறையை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்!!!
இதன் மூலம், ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் 3000 மருத்துவ கல்லூரி இடங்களின் 2500 இடங்களுக்கு மேல் நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கே கிடைத்துக் கொண்டிருந்தது, அதாவது 260
மாணவர்களில் ஒருவர் மருத்துவ படிப்பை பெற முடியும்.
NEET தேர்வு முறையால் தமிழ்நாட்டிற்க்கும் தமிழக மாணாக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்பு!!!
* குறையும் வாய்ப்புகள்:-
ஆனால் NEET என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், தமிழகத்தின் ஒரு மாணவன்/மாணவி ஒரு மருத்துவ கல்லூரி இடத்திற்க்காக இந்திய முழுவதிலிருக்கும் ஏறத்தாழ 3000 மாணவர்களுடன் போட்டியிட வேண்டும்.
* போட்டித்தேர்வா??? தகுதி அறியும் தேர்வா???
நீட்’ நுழைவுத்தேர்வில் ஒரு குறிப்பிட்ட ”குறைந்தபட்ச” மதிப்பெண்ணை பெற்றால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கே தகுதி பெற முடியும். ஒரு போட்டித்தேர்வை (Competitive Examination), தகுதி அறியும் தேர்வாகவும் (Qualifing Examination) மாற்றுவது சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் பாதிக்கும்.
* மாநில கல்வித்திட்டத்தின் கேள்விக்குறி:-
மத்தியக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழ்நாடு கல்வி வாரியம் மூலம் படித்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.
* அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை
‘நீட்’ நுழைவுத்தேர்வை முதுநிலை மருத்துவக் கல்வியில் திணித்தால், அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவர். தொடர்ந்து மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்யும் அவர்களால், ‘நீட்’ தேர்வில் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெற முடியாமல் போகலாம். இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வது குறைந்து விடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். இது அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய நோயாளிகளைப் பாதிக்கும்.
இந்த மருத்துவ நுழைவு தேர்வு AIIMS,
ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவ மனைகளுக்கு கிடையாது,தமிழகத்தில்
AIIMS மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகள் இல்லை!!!
ஜிப்மரில் உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 1.35 லட்சம் மாணவர்களும், 3085 அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்களும் , எய்ம்ஸ் – மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 682 இடங்களுக்கு 80 ஆயிரம் மாணவர்களும் கடந்த ஆண்டு போட்டித்தேர்வு எழுதினர்
டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நமது தமிழக மாணவர்கள் 1995முதல் 2012 வரை வெறும் 6 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இது மிகவும்கவலைக்குறிய ஒரு தகவலாகவே நாம் பார்க்க வேண்டும்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைகேடுகளைத் தடுக்கவே நீட் என மத்திய அரசு கூறிக்கொள்கிறது.ஆனால்,முறைகேடுகளை வளர்க்கும் வகையில் அண்மையில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு,மாநில அரசுகள், சொசைட்டி அல்லது டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்புகள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட , தனியார் கம்பெனிகளும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வழிவகுக்கும் அறிவிக்கை 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் ,மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான ``தகுதிகள் குறித்த ‘’ பிரிவில் , இதற்கான புதிய சரத்து சேர்க்கப்பட்டது. இருப்பினும், தனியார் கம்பெனிகள் மருத்துவக் கல்லூரிகளை வணிகநோக்கில் நடத்தினால் , அக்கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும் என விதி முறை 1 ல் சரத்து 6 ன் மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.எனவே, லாபமீட்டும் நோக்கில் செயல்படும் பெரிய கம்பெனிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட தயக்கம் காட்டின. இந்நிலையில், இப்பொழுது, இந்த விதிமுறையை நீக்கிட வேண்டும் என மத்திய அரசு இந்திய மருத்துவக் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, ``வணிக நோக்கில் செயல்பட்டால் , மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்’’ என்ற பிரிவை மத்திய அரசு நீக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.ஒருபுறம் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுத்திட,முறைகேடுகளைத் தடுத்திட நீட் எனக் கூறும் மத்திய அரசு ,மறுபுறம், அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவது கேலிக்கூத்தாக உள்ளது.
இந்தியா முழுவதும், பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், வாரியங்கள்,ஏற்றத்தாழ்வான தரமுடைய கல்விநிறுவனங்கள்,என பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்ற ஒரு சூழலில் இது போன்ற ஒற்றைப்படையான தேர்வு முறையை எவ்வளவு தான் நியாயப்படுத்தி பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தாலும் அது சமூக அநீதிக்கே வழிவகுக்கும்.
தவிர மாநிலங்களுக்கான உரிமையை கையகப்படுத்தும் வகையில் ஜி.எஸ்.டி, கொண்டு வருதல்,சமஸ்கிருதம் மற்றும் இந்தியை வலியத்திணிக்கும் செயல் என்று தொடர்ச்சியாக இந்திய இறையாண்மைக்கும்,பன்முகத்தன்மைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய விசயங்களையே செய்து கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் விசமத்தனமான கொள்கைக்கு மற்றுமொரு திட்டம் தான் “NEET” தேர்வு முறை என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும் மாநில சுயாட்சிக்கும் போராடி வருவதாக கூறி வரும் திமுக இந்த “NEET”ஆதரிப்பது தான் மிகக்கேவலமானது.
No comments:
Post a Comment