Sunday, October 23, 2016

புன்னகையில் சரவெடி.......

இன்றிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி...

ஒரு 10 கிலோ ஸ்வீட் வாங்கி கையில் வைத்துக்கொள்ளுங்கள்....

உங்கள் தெருவின் முனையில் கூடை நிறைய பூ விற்றுக்கொண்டிருக்கும் பூக்காரப்பெண்மணியின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்...

உங்கள் தெரு குப்பையை அள்ளும் கார்ப்பரேசன் ஊழியரின் பிள்ளைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

உங்கள் கிழிந்த துணிகளை தைத்துக்கொடுக்கும் அந்த எளிமையான டெய்லரின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்...

தினமும் அயர்ன் செய்து கொடுக்கும் உங்கள் அபார்ட்மெண்டின் அயர்ன்காரரின் பிள்ளைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

நீங்கள் அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் தெருவோர செருப்புத்தைப்பவரின் குழந்தைக்கு ஒரு கிலோ ஸ்வீட்.....

மீதமிருக்கும் 5 கிலோ ஸ்வீட்டை இதுபோன்று உங்களைச்சுற்றியுள்ள எளிய மனிதர்களை நீங்கள் பார்க்கும்பொழுது அவர்கள் கையில் கொடுத்து புன்னகை பரிமாற்றம் செய்வோம்....

தீபாவளிக்கு விளக்குத்தான் ஏற்றவேண்டுமா என்ன.... சிலரின் உதடுகளில் புன்னகையைக்கூட ஏற்றலாமே...??


No comments:

Post a Comment