Wednesday, August 17, 2016

காமப்பித்ததில் காதல்யுத்தம்!!!

சொல்லப்படாத
எனது
காதலை 
நீ புரிந்துகொள்ள 
முயற்சிக்க வேண்டாம்
உணர்ந்து கொள்!!!
போதும்!!!

உணர்ந்து கொண்ட 
காதலை என்னிடம்
கதைக்க
கவலை கொள்ளாதே
உன் 
உடல் மொழி
போதும்!!!

கட்டாயப்படுத்தி 
காதலை திணிக்க
காதல்
என்ன கசக்கும்
மருந்தா??

காமப்பித்தத்தை 
தலைக்கு ஏற்றி 
வெறும்
வாந்தியாய்
வெளியேற்றும்
காதல்
என்ன அவ்வளவு
புனிதமானதா??

காமத்தை கொண்டு 
காதலை மறைக்கிறோமா
அல்லது
காதலைக்கொண்டு
காமத்தையா????

No comments:

Post a Comment