Thursday, December 19, 2019

ஒழுக்கம் - ஆண்பாலா பெண்பாலா அல்லது பிறர்பாலா?

மிக ஆளமான பண்பாட்டையும், நாகரீகத்தின் உச்சகட்டத்திலும், கலாச்சார செறிவும் நிறைந்த 
இந்த இந்திய தேசத்தில் பிறந்து வாழ்ந்து சாவது என்பது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரும் சவால்! 

ஏனெனில் இந்த நாட்டையும் மண்ணையும் நதியையும் பெண்ணிற்கு ஒப்பிடுவார்கள், 

அதே நேரத்தில் பெண்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கும் வசிப்பதற்கும் இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கும்.

இந்த புண்ணியபுமி சக்தியின் மறுவடிவம் என்பார்கள் ஆனால் மாதவிடாய் என்று காரணம் காட்டி கோயிலுக்குள் விடமாட்டார்கள். 

நல்லவேளை, பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களின் “ஆண்குறிகளை” வெட்டிவிட வேண்டும் என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் இந்த புண்ணிய தேசத்தின் நல்லவர்கள் பேச்சைக் கேட்டிருந்தால்

கலாச்சார மகிமையும் மாட்சிமை தாங்கிய இந்த இந்திய மண்ணில்த  உலகின் மிகப்பெரிய “ஆண்குறி பொருட்காட்சி”  அமைந்திருக்கும்.

“போட்டுத்தள்ளுங்கடா” அந்த பொம்பளப்புள்ளைய்ங்கள ரேப் பண்ணவைய்ங்கல ந்னு சொல்ற பல பேரு, கையை அவசரமாக தூக்கும் பெண்ணின் அக்குளையும் கொஞ்சமாக தெரியும் இடுப்பு சதையையும் “ வெறிக்க “ வெறிக்க” பார்க்கும் உத்தமர்கள் தான். 

எப்படி டிரெஸ் போட்டுகிட்டு போறா பாரு, அப்புறம் இவளுங்கள் ரேப் செய்யாம ஆரத்தியா எடுப்பாய்ங்க? என்று என்று அறிவுப்புழுதியைப் பறக்கடித்து பேசும் புத்திசாலிகள் தான்.

இவர்கள் தான் இன்று 4 ரேப்பிஸ்ட்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கொண்டாடி மகிழ்கிறார்கள். 

தனிமனித ஒழுக்கத்தில் இருந்து பிறழ்ந்து அதை மூடி மறைக்க கூட்டுப்பிரார்த்தனைக்கு கோயிலுக்கும், சர்ச்சுக்கும் போன அதே கூட்ட்

தனக்கு ஆண்பிள்ளை பிறந்தவுடன் “ சிங்கம்லே, எம்மவன் ஆம்பளடா, என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு,

அந்த சிறுவயதிலேயே அச்சிறுவனின் நெத்தியில் “சுன்னியை” முளைக்க வைக்கும் தாய் தந்தையர்களுக்கு இருக்கும் அதப்புக்கும்,

“ நீ பொம்பளப்புள்ள” சீக்கிரமா வீட்டுக்கு வரனும், மொனங்கால் தெரியாம டிரெஸ் போடனும்னுசொல்ற அம்மா அப்பாவுக்கு இருக்கும் அச்சத்திற்கும்

No comments:

Post a Comment