தமிழர் விசயத்தில், அதுவும் ஈழ விசயத்தில் இந்தியா மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது என்பது தான் சிறு குழந்தைக்கு கூட தெரியுமே........
ஈழம்,அதன் மக்களை காப்பதற்க்கு இனி இந்தியனாய் குரல்கொடுப்பது பலனில்லை பலமுமில்லை.
தமிழனாய் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள் மிஸ்டர் வைகோ!!!!
உங்கள் கூட்டணி தலைவர் இன்னும் பலமுடன் தான் இருக்கிறார்.உங்கள் தொண்டர்கள்,கூட்டணி கட்சி தொண்டர்கள் என்று குறைந்த பட்சம் ஒரு பத்தாயிரம் பேர் தேறுவார்களே.........
கட்சி சார்பற்ற ஈழ ஆதரவாளர்கள் என்று பார்த்தாலே குறைந்த பட்சம் ஒரு இரண்டாயிரம் பேர் தேறுவார்களே......
இவர்கள் அனைவரையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து,இந்திய பாராளும் மன்றத்தை ஸ்தம்பிக்க செய்யலாமே......
அல்லது தமிழகத்தில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களையும் ஸ்தம்பிக்க செய்யலாம்.
இன்னும் எங்களை விட விசாலமாக வீரியமாக நீங்களே சிந்திக்கலாம் மிஸ்டர் வைகோ.....
உங்களிடம் அந்த சக்தி இன்னும் இருக்கிறது!!!!!
கலைஞர்,ஜெயாவிடம் இல்லாத,ஈழத்தின் பால் "அடங்காப்பற்று' உங்களிடம் இருக்கின்றது!!!!!
உங்கள் பின்னணியில் கட்சி சாரா இளைஞர்கள் கண்டிப்பாக ஈழபிரச்சனையில் அணி வகுப்பார்கள்.
தயவு செய்து சிறு பிள்ளை போன்ற வாதபிரதிவாதம்செய்வதை விட்டு விட்டு செயலில் இறங்குவோம்......
ஈழம் பத்தி பேச இப்பொழுது தயங்கும் அனைவருக்கும் தூண்டுகோலாக நீங்களே இருங்களேன்......மிஸ்டர் வைகோ.........
உங்களை போன்றதொரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினரை இம்முறை இழந்தது தமிழகத்திற்கும் இந்திய பாராளு மன்றத்திற்கும் நஷ்டமே........
ஆனால் இந்த நஷ்டத்தை ஈழ மக்களுக்கான லாபமாக ஏன் மாற்றக்கூடாது ?????
தமிழகம் மதிக்கும் ஒரு தலைவர் நீங்கள்.
உங்கள் முயற்சியால்,இங்கு நடக்கும் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒன்றிணைக்கலாம்,
பாராளுமன்றம் என்ன..... ஐநா மற்றும் ஒபமா போன்றவர்களை எப்படி இதில் ஈடுபடுத்தி ஒரு சலனத்தை உண்டு பண்ணலாம் என்ற வழி வகைகளை நன்கு அறிந்தவர்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் மீதும் ஈழ மக்களின் மீதும் பழுதில்லாத பாசம் வைத்து இருப்பவர்.
உங்களின் ஈழ பற்றின் மீதும் யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே இச்செயல் புரிவதற்கு உங்களை விட்டால் யாரும் இல்லை மிஸ்டர் வைகோ..........
விரைவில் சிந்திக்கவும்
அதை விட விரைவில் செயல்படுத்தவும்.
No comments:
Post a Comment