ஈழ காவலர் ஐயா நெடுமாறன் அவர்களே.......
வெறுமனே இன்னும் எத்தனை காலம் தான் கலைஞரையும் அவரின் நயவஞ்சகத்தையும் குறை கூறி கொண்டு உங்கள் குறிக்கோள் மற்றும் கடமையில் இருந்து பிறழ்ந்து கொண்டே இருப்பீர்கள்?????
ஈழத்திற்கு சென்ம விரோதியாக இருந்த ஜெயலலிதாவிற்கு அவரின் திடீர் ஈழ பாசத்தின் காரணமாக அவருக்கு ஈழ தாய் பட்டம் கூட தருவதற்கு தயாராக இருந்தவர்கள் தான் நாம் அனைவரும்.
எப்படியாவது ஈழ மக்களுக்கு எந்த வகையிலாவது எந்த வழியாலாவது ஏதேனும் நன்மை நடந்து போர் முடிந்து தனி நாடு கிடைத்து விடாதா என்பதே நம் அனைவரின் தாகம்.
நிலவரம் இவ்வாறு இருக்கையில்,அமெரிக்கா,பாஜாக,ஜெயலலிதா போன்றோரின் தயவை கூட எதிர்பார்த்து இருந்த நிலையில் உங்களை போன்ற உண்மையான ஈழ ஆதரவு தலைவர்கள் சற்றேனும் தன்னிலையில் இருந்து மாற்றம் செய்து கொண்டு கலைஞரிடம் இணைந்து செயல்பட்டு இருந்து இருக்கலாம்!!!!!
அவ்வாறு இணைந்து செயலாற்றி இருந்தால் ஏதேனும் பயன் இருந்து இருக்கலாம் என்பதே எங்களை போன்ற கட்சி சார ஈழ ஆதரவு பொது சன ஆதங்கம்.
தவிர,எதிர்கட்சியாக இருப்பதில் உள்ள வசதியும் அதிகம், நீங்களும் தேர்தலுக்காக நீங்கள் அனைவரும் ஏற்று கொண்ட தலைமையும், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் ஒரே புள்ளியில் அதாவது ஈழ ஆதரவில் இணைந்து இருப்பது கண்டிப்பாக கலைஞருக்கே கூட தலைவலியான பிரச்சனை தான்.
வெறும் தேர்தல் கால பாசமாக இதை அடுக்காமல் அதே உத்வேகத்தை அப்படியே இன்னும் தொடந்து கொண்டு செல்வதில் என்ன சங்கடம்.
அதுவும் உங்கள் கூட்டணி முன்பை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றும் இருப்பது சாதகமான விசயமே......
திமுக அணி வெற்றி பெற்றது போல தோற்றமளித்தாலும் உண்மையான வெற்றி எதிர்கட்சிகளுக்கு தான் என்ற உண்மையை உளவியல் ரீதியாக ஊடகங்கள் ஈழ எதிர்ப்பு அலை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்த்தி விட்டார்கள்.
அந்த பள்ளத்தில் உங்களை போன்றோரும் விழுந்தும் விட்டார்கள்.
உண்மையில் உற்று நோக்கினால்,தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு முன்பை விட வெற்றி கனியை வழங்கி தான் இருக்கிறார்கள்.அதை அப்படியே தூக்கி தூர போட்டு விட்டு இன்னும் கலைஞரின் நயவஞ்சகத்தை பற்றி பேசி கொண்டு இருப்பதால் ஈழத்திற்கு தான் என்ன நன்மை.
அம்மையாரிடம் வாய் திறக்க முடியாதவர்கள் பிரச்சனையையும் திசை திருப்ப முயல்வது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.
வழியில் அசிங்கம் இருக்கிறது என்பதற்காக அங்கயே நின்று விடுவது புத்திசாலித்தனமா?????
அசிங்கத்தை தாண்டி நமது குறிக்கோளை நோக்கி செல்வது உசிதமில்லையா????
கலைஞரை தாண்டி போவது தான் இந்த ஈழ ஆதரவு தலைவர்கள் இப்பொழுது எடுக்க வேண்டிய நிலையாக இருக்குமே அன்றி தேவை இல்லாமல் பிரச்னையை தவறான திசையில் திருப்பி அரசியல் ஆதாயம் தேடுவது என்பது ஆபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
No comments:
Post a Comment