Wednesday, May 20, 2009

ஈழத்திற்கு துடிக்கும் அனைவருக்கும்....

உலகத்தில் வேறெந்த தேசத்தில் புலம் பெயர்ந்து இருக்கும் ஈழ தமிழர்கள் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்க, அந்த தேசத்தின் குடியுரிமை பெற்று,அந்த தேசத்து மக்களுக்கு உண்டான அனைத்து வகையான உரிமைகளையும்,உடமைகளையும் பெற்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது தமிழகத்தில் (இந்தியாவில்)புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் இன்னும் அகதிகளாக மூன்றாம் நாலாந்திர குடிமக்களாய்,எந்த வித உரிமைகளும் இன்றி,மிக கொடுமையானதொரு சொல்லலில் இருக்கும் மர்மம் என்ன????

உலகம் முழுக்க, வெள்ளையர்கள் தேசங்களில் கூட, புலம் பெயர்ந்த தமிழனின் போராட்டங்கள் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக புலம் பெயர்ந்தோர் மட்டும் எப்படி ஒரு ஆதிக்க சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு, தான் அழுவது தனக்கே கூட கேக்க கூடாது என்பது போல மௌன துக்கம் அனுஷ்டிக்கும் ஈழ அகதியின் நிலை நம்மில் யாருக்கேனும் தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளதா???

ஈழத்தை பற்றி அரற்றி,துன்பித்து, சோகம் காட்டி, கதறி அழத் துடித்து, இந்திய வல்லாதிக்கத்தின் மீதும், அரசியல் வாதிகளின் மீதும் கடும்கோபம் கொண்டுள்ள நாம்............

இவ்வளவு பெரிய ஒரு சோகம் நமது நாட்டிற்குள்ளே நடந்து கொண்டு இருக்க்ம்பொழுது, ஈழம் குறித்த நமது கரிசனம் மீதே எனக்கு ஐயம் ஏற்ப்படுகிறது.

நண்பர்களே போராளிகள் என்பது ஒரு சாரார்!!!!

அவர்களுக்கு ஆதரவளிப்போ என்பது ஒரு சாரார்!!!!

ஆனால் இதை எல்லாம் கடந்து இன்னொரு பரிதாபத்திற்குரிய ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்கள் தான், நமது தேசத்தில் வந்து நம்மையே கதி என்று தஞ்சம் என்று நம்பி வந்த நம் உறவுகள்.அவர்களை பற்றி சற்றேனும் ,என்றேனும் கவலை பட்டு இருக்கின்றோமா?????

குறைந்த பட்சம் அவர்களுக்கு உணவு உடை,வீடு மற்றும் உரிமை வாங்கி தருவது நமது கடமை அல்லவா???

ஏதிலியாய் இருக்கும் என்னவனின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதும் உளவியல் ரீதியான பிரச்சனையில் சிக்குண்டு இருக்கும் அவனை சிக்கலில் இருந்து சீர் படுத்த வேண்டாமா?????

எமது சொந்தத்துக்கு உதவி செய்ய துடிக்கும் எம்மை எவர் எதிர்ப்பார் என்று சினங்கொள்ள வேண்டாமா???

அவர்களுக்கு நமது நாட்டு குடிஉரிமை வாங்கி தருவது நம்மை போல சகல உரிமையும் வாங்கி தருவது நமது கடமை அல்லவா???

நமது உறவான ஈழ தமிழனுக்கு,நாமே சம உரிமை கொடுக்காத பொழுது சிங்களவனிடம் எதிர்ப்பார்ப்பது போலி தனம் இல்லையா???????

போலி தனத்தை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா????????

No comments:

Post a Comment