Thursday, May 26, 2016

மோதி எனும் பிம்பம்!!!!

பாரதிய ஜனதா கட்சி  ஆட்சிமைப்பதற்க்கான  மேடைகள் தயார் செய்யப்பட்டுவிட்டது.... 
 
ஆனால் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கப்போகின்றவர்கள் யார்???
 
மோதியா??? அல்லது மோதி அலையா?? 
 
மோதி அலை என்பது உருவாக்கப்பட்ட ஒன்று அது உண்மையுமில்லை உண்மையிலில்லை இது மோதியே அறிவார்!!!
 
முற்ப்போக்காளர்கள் தொடர்ச்சியாக கூறி வருவது போல இந்திய கார்ப்பொரேட் கம்பெனிகளா??

கார்ப்பொரேட் நிறுவனங்கள் வெற்றி பெறும் குதிரையின் மீது பணம் கட்டும் வியாபாரிகள்!!! 
 
மோதி அலை என்ற பிம்பத்தை கட்டமைத்து ஊதித்தள்ளிய ஊடகங்களா??
 
ஊடகங்கள் கூலிக்கு மாரடிப்பவை அவை பிஸ்கட்டிற்க்காக வாலாட்டும் தந்திரக்கார நாய்கள்.....
 
எனவே இவர் யாருமில்லை!!! பின் யார் ??
 
இந்த நாட்டு மக்களா????

இந்நாட்டை இந்த மக்கள் தான் உளமார நேசிக்கின்றனர்.இந்த நாட்டின் மீது அவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் இந்தியர்கள் தங்கள் நாட்டின் நலன் விரும்பிகள்
 
இந்திய மக்கள் எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சியை இந்நாட்டை ஆளுவதற்க்கு முழுத்தகுதி வாய்ந்த்த கட்சியாக கருதி அவர்களிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுக்கவில்லை!!!
 
மத சார்பின்மை என்பதை மக்கள் மிகத்தெளிவாகவே உணர்ந்து இருந்தனர்.
 
ஆனால் இந்திய தேசத்தின் அரசியல்வாதிகளும் அதன் அரசியல் கட்சிகளும் மிகுந்த கயமை மிகுந்தவர்கள். அவர்களின் சுய லாபத்திற்க்காகவும்,பொருளாதார வளர்ச்சிக்காகவும், கட்டற்ற சக்திவாய்ந்த பதவிகளுக்காகவும் இந்நாட்டை பாலியல் பலாத்காரம் செய்யாத குறையாக ஏகபோகமாக அனுபவித்தனர்!!!

ஊழல்,வெளிநாட்டில் சொத்துகுவிப்பு, சித்தாந்த ரீதியான அரசியல் கொள்கை கொண்டவர்களின் பேராசைப்போக்கு,போலி மதசார்பின்மை,சாதிய ரீதியிலான பொய்மையும் கயமையும் நிறைந்த சாதிய அரசியல்வாதிகள்,குடும்ப அரசியல்,இப்படி பல்வேறு ஏமாற்றுத்தனங்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட மக்கள் இறுதியாக இந்த சனநாயகத்தின் மேலேயே எரிச்சலடைந்து ஒரு ராணுவ ஆட்சி இருந்தால் கூட தேவலை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்!!!
 
இதிலும் மிக புத்திசாலியான நாட்டுமக்கள், சனநாயகத்தையும் விட்டுக்கொடுக்காமல், ராணுவ ஆட்சிக்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஃபாஸிச உருவமான ஒரு மக்கள் தலைவரை சரியாக கண்டெடுத்தனர் குஜராத்தில்....

குஜராத்தில் மோதி தலைமையிலான அரசு ஆட்சி புரிகையில் நடந்த மிகப்பெரிய கோர சம்பவங்களால் நடுங்கிப்போனது குஜராத்தியர் மட்டுமல்ல....மொத்த இந்தியாவும் தான்!!
 
ஆனால் அந்த கோரச்சம்பவத்திற்க்கு பிறகு அங்கு வளர்ச்சி ஏற்ப்பட்டதோ இல்லையோ இன்னொரு முறை பிரச்ச்னை ஏற்ப்படவில்லை, அதற்க்கு அங்கு நல்லாட்சி ஏற்ப்படவில்லை ஆனால் " பயம்" உருவாகிவிட்டு இருந்தது!!!
 
போலி மதசார்பின்மை என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு இருந்த காங்கிரஸ் முதலான பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த நாட்டில் மதப்பிரிவினை வாதம் ஒன்றை வைத்து இந்து முஸ்லீம் சண்டையை வைத்தே ஆட்சி செய்து கொண்டு வந்த நிலையில்...

மக்களுக்கு ஒரு புதிய ஆட்சிமுறை கன்ணில் பட்டது. அதாவது மக்களின் மனதில் பயத்தை உருவாக்கு பின் அவர்களை ,நான் உருவாக்கிய பயத்தை கொண்டே ஒரு சர்வாதிகார சனநாயக ஆட்சி செய்.

சன நாயகத்தின் கட்டற்ற சுதந்திரமும் இருக்காது,சர்வாதிகாரத்தின் கட்டற்ற அடக்கு முறையும் இருக்காது.

குஜராத்தின் இந்த ஆட்சி மாடல் (model) தான் மொத்த இந்தியாவின் சாமானியனை புருவம் உயர்த்திப்பார்க்கவைத்தது.இதை மொத்த இந்தியாவின் கவனத்திற்க்கும் கருத்திற்க்கும் கொண்டு சென்றது குஜராத்தியர்களே.

ஏற்க்கனவே சாக்கடை அரசியல்வாதிகளின் மீது எரிச்சலில் இருந்து,ராணுவ ஆட்சி தான்  இந்நாட்டிற்க்கு தேவை என்று பேசிக்கொண்டிருந்த அனைத்து நடுத்தர மக்களுக்கும் மோதி என்ற அராஜக சர்வாதிகார போக்குக்கொண்ட ஒரு தலைமை கவர்ச்சியாக தெரிந்தது.

இதை சமயோசிதமாக புரிந்துகொண்ட மோதியும் அவரது தொண்டர்களும் வெளிநாடுவாழ் குஜராத்தியர்கள்(இவர்கள் மிக முக்கியமானவர்கள்,தமிழர்கள் தங்களை யூதர்கள் போன்றவர்கள் என்று அழைத்துக்கொள்வதெல்லாம் மிகப்பெரிய காமெடி.உண்மையில் குஜராத்தியர்கள் தான் இந்திய யூதர்கள் எனச்சொல்லலாம்) சரியான முறையில் மொத்த இந்தியர்களுக்கும் இச்செய்தியை கடத்தினர்.

முற்றிலும் ஒரு புதிய நூதனமான மக்களாட்சியை,அதாவது (”சன நாயகத்தின் கட்டற்ற சுதந்திரமும் இருக்காது,சர்வாதிகாரத்தின் கட்டற்ற அடக்கு முறையும் இருக்காது”) கற்பனை செய்து வைத்திருந்த இந்தியர்களுக்கும்,மோதியின் குஜராத் மாடலை ”சரியானதாக”??!! முடிவு செய்தனர்.

பின் மோதியின் பாரதிய ஜனதா கட்சியும் இந்த திட்டத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தது. தன்னை சாமானிய மக்களாகக்காட்டிக்கொள்ள மோதியும் அவரது ஆதரவாளர்களும் மோதியின் ஒரு புது பிம்பத்தை கட்டமைத்து அதை மக்களிடம் கொண்டு போய்ச்சேர்த்து அதை அவர்களை நம்பவைக்க மேற்க்குலகில் கையாளும் மார்க்கெட்டிங்க் முறையை அமுல்படுத்தினர்.

பின் சிறிது சிறிதாக அடிமேலடியெடுத்து வைத்து பிம்பம் நிஜமென நம்பவைக்கப்பட்டது.மக்களின் அடியாழத்தில் எழும்பிக்கொண்டிருந்த ஒரு அலை மோதி அலைதான் என அவர்களையும் நம்பவைத்தனர்.

இந்திய அரசியலின் ரவுடித்தனம் மிக்க,ஊழல் நிறைந்த,சாதி மத பிரிவினையில் குளிர்காய்ந்த அரசியல்வாதிகளுக்கான மாற்று மோதி தான் என பிரகடனப்படுத்தப்பட்டது. 

இன்று மோதி ஆட்சியில் அமர்வதற்க்கான அனைத்து சாத்தியங்களும் இப்படித்தான் உருவாகியது.

மோதி பிரதமரானால் அதற்க்கு இந்திய நாட்டுமக்களை எந்த ஒரு கொம்பனும் குறை கூற முடியாது.இது மக்களின் கூட்டு மனசாட்சி.

அவ்வாறான ஒரு நிலையை மக்களை நோக்கித்தள்ளிய  பிற அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மை சுயபரிசோதனைக்குள்ளாக்கவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளி விட்டனர்.

இந்த நாட்டு மக்கள் மோதியை பிரதமராக தேர்ந்தெடுத்தனர் என்றால் அதற்க்கு மக்கள் பொறுப்பல்ல தாங்கள் தான் பொறுப்பு என்ற புரிதல் வரவில்லையென்றால் இன்னும் பல மோதிக்கள் இந்திய ஜனநாயகத்தில் பிறப்பதை எவனும் தடுக்க முடியாது.

அரசியலில் நேர்மை,பொதுவாழ்க்கையில் தூய்மை, என்ற கொள்கைகளை தூக்கிக்குப்பையில் போடதினால் வந்த வினை இவையென்று இந்த இந்திய அரசியல்வாதிகள்புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

மக்கள் முட்டாள் அல்ல,அவர்கள் மிக புத்திசாலித்தனமான முடிவெடுத்து இருக்கிறார்கள். 

ஆனால் புத்திசாலித்தனமான முடிவெல்லாம் நல்ல முடிவாகத்தான் இருக்குமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

இதுவும் மக்களுக்கு புரிகின்ற நாட்கள் தூரமில்லை.

பின் குறிப்பு:-

ஒரு அரசியல் பார்வையாளனாக,அரசியல் விமர்சகனாக,பெரியாரிய கொள்கைகளின் மாணவனாக அதே நேரத்தில் பணியாக்களிடம் நட்பும்,வியாபரமும் செய்தவனாக,பார்ப்பனர்களையும்,இஸ்லாமியர்களையும் நாத்திகர்களையும் ஒரு சேர நட்பு வட்டாரத்தில் வைத்திருப்பவனாக, ”குஜராத்திய” இந்து முஸ்லீம் நண்பர்களுடன் ஒரு சேர உணவு அருந்துபவனாக,பாஜக நண்பர்களிடம் உன்னதமான நட்பில் இருப்பவனுமாகிய நான்,தேர்தல் ஜுரம் தொடங்கியதில் இருந்து பல்வேறு தரப்பில் நான் கண்டதை கேட்டதை படித்ததை,விமர்சித்ததில்,விவாதம் புரிந்ததில்,எனக்கு புரிந்தவற்றை அப்படியே எழுதியிருக்கிறேன்.

இது என்னுடைய சுய புரிதலேயன்றி என்னுடைய அரசியல் சார்போ சார்பற்ற தன்மையோ அல்லது நடுநிலைமையோ அல்ல.



No comments:

Post a Comment