Thursday, January 07, 2016

செய்வீர்களா..... நீங்கள் செய்வீர்களா...??

நாம எல்லோரும் ரொம்ப தெளிவா அடுத்தவுங்க மேல, அதாவது, ரியல் எஸ்டேட் முதலாளிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகள்,நடிகர்கள், இப்படி எல்லோர் மேலையும் பழியை போட்டுவிட்டு, நமக்கும் சமுதாய கோபம் இருக்குற மாதிரி காமிச்சுக்கிட்டே, நம்ம சமூக சேவையை ஒரு ரெண்டு நாள் மழையில் கஷ்டப்படுறவுங்களுக்கு உதவி செய்யுற மாதிரி ஒரு செல்பிய எடுத்து போட்டுட்டு நம்ம வேலைய பாக்க கெளம்பிடுறோம்.....

இவ்வளவுதான் நமது வேலையா.... நாம் செய்த செய்துகிட்டுஇருக்குற இனிசெய்யப்போற தவறுகளுக்கு யார் பொறுப்பேற்ப்பது...??

நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்குற குப்பையையோ அல்லது சாக்கடையையோ என்றாவது பார்த்திருக்கிறோமா...?

நாம குடிச்சுமுடிச்ச ஒடனே மினரெல் வாட்டர் பாட்டிலை அப்படியே தானே தூக்கி எறிகிறோம்..... ரோட்ல..??

மக்கும் குப்பைக்கும் மக்காத குப்பையையும் தனியா பிரிச்சு என்னிக்காவது குப்பைத்தொட்டியில போட்டு இருக்கோமா... அத விடுங்க இளைஞர்களே குப்பத்தொட்டி எங்க இருக்கான்னாவது நமக்கு தெரியுமா...??

மரம் வளர்ப்போம்னு சொல்லி செடிய நட்டு போட்டுட்டு போயிருக்கோம் அந்த செடில எத்தன பாதுகாப்பா இருக்கு அதுக்கு தண்ணி ஊத்தி இருக்கமா அதுல எத்தன மரமவாவோ கொடியாவோ வளர்ந்து இருக்கு... சொல்லுங்க...???

இந்த மாதிரி நாம செய்யுற தவறுகளை ஒத்துக்கிற தைரியம் இங்க நம்மகிட்ட எத்தன பேருகிட்ட இருக்கு....??

அப்படி தைரியம் இருக்குறவுங்க வாங்க..... உங்க போட்டோவோட அல்லது வீடியோவோட நீங்க இதுவரைக்கும் இயற்க்கைக்கு எதிரா செஞ்ச ஒரு விசயத்த "குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்னு" தைரியமா சொல்ல முடியுமா...???

வாங்க இதை ஒரு சமுதாய கோபமா இயக்கமா அரசியல் மாற்றம் எல்லாம் பேசுறதுக்கு முன்னாடி நம்மோட " சுய ஒழுக்கம்" " தனிமனித ஒழுக்கம்" பற்றி பேசுவோம் வாங்க...

நான் ரெடி  ......நீங்க ரெடியா....???

No comments:

Post a Comment