Friday, August 12, 2016

யார் இந்த ஜக்கி வாசுதேவ்....???

யார் இந்த ஜக்கி வாசுதேவ்???

தியான குருவா???
ஆன்மீக குருவா???
கார்ப்பொரேட் குருவா????
யோக குருவா????
செக்ஸ் குருவா.....??

இறை நம்பிக்கையில் உள்ள ஒரு ஆகப்பெரிய அரசியலை முதலில் நாம் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும்,

முதலில் பார்ப்பனர்கள், கோயில்களை தங்களின் ஏகாதிபத்திய சொத்துக்களாய் வைத்திருந்தனர்.

பின்னர் அவற்றை தமிழகத்தில் பெரியார் முன் வைத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த சமூகசீர்திருத்தவாதிகள் அவற்றை சமத்துவமாக அனைவரும் சென்று வர தகுதியான இடமாக கோயில்களை மாற்றியமைத்தனர்!!!

ஆகம விதிகளுக்கு எதிராக இவ்வாறான அபச்சார நிகழ்வுகளுக்குப்பிறகு பார்ப்பனிய ஆதிக்க சக்திகளின் ஒரே வருமான வழியான "ஆண்டவன் பெயர் சொல்லி ஆட்டையைப்போடும்" தொழிலுக்கு பங்கம் வந்து விட்டது!!!

அடுத்து எப்படி தங்கள் தொழில்வளர்ச்சியைப்பெருக்கலாம் என்ற அனேக திட்டமிடலுடன் இவர்களுக்கு தோன்றிய அபரிதமான ஒரு வடிகால் தான் " தியானம், ஆழ்நிலை தியானம், யோகா போன்ற லாஹிரி வஸ்துக்கள்!!!

அமெரிக்க அடிமைகளாகவும் ஒயிட்காலர் கூலிகளாகவும் மாறிவிட்ட கார்ப்பொரேட் மனிதப்பதர்களின் பயமுறுத்திகளாக  இருக்கும் மன உளைச்சல், தூக்கமின்மை, மறதி போன்றவைகளை இன்ஸ்டண்டாக தீர்க்கவல்ல இரு நொடி மேஜிக் நூடுல்ஸ் போல யோகா மற்றும் தியானங்கள் மாறியன.

இவற்றை கையகப்படுத்தி உடனடியாக  தாங்கள் காசு பார்க்க நினைக்காமல் தொலைநோக்குப்பார்வையுடன் ஒரு கொடுந்திட்டத்தை தீட்டினர்!!

சில பல அரைகுறை அறிவாளிகளை, இம்மாதிரியான நாலுநொடிகளில் ஞானம் அடையும் வழியையும், குறைந்த நேரத்தில் குண்டலி எழுப்பும் வேலையையும் செய்வதற்க்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இந்த இன்ஸ்டண்ட் இலுமினியாட்டிகளின் தொழிலும் சிறப்பாக நடைபெற்றது!!

இங்கனம் செவ்வனே சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில் தான்,இவர்களை பல ஜில்ஃபான்ஸ் வேலைகளைப்பற்றிய பல செய்திகள் வெளியாகத்தொடங்கியது!!!  
இந்த ஜாதி இந்துக்களால் தொடங்கப்பட்ட பல்வேறு ஆன்மீக ஆசிரமங்களின், பார்ப்பனியரல்லாதோரின் பஜனை மடங்களில் நடைபெற்ற பல லீலாவிநோதங்கள் இன்று வெளி வரத்தொடங்கியுள்ளது!!!( இதன் பிண்ணனியில் கூட இந்த ஐயர்களின் கூட்டுச்சதி இருக்க வாய்ப்பிருக்கிறது) 

மக்களுக்கு இந்த சாமியார்களின் மீதுள்ள மோகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிய விரைவில் வடிந்து முடிந்து விடும்பொழுது அவர்கள் முன் இருக்கும் ஒரே ஆபத்பாந்தவன் ஆண்டவனும்,அவனுக்கு மட்டுமே சேவகம் செய்யும் சாந்தஸ்வரூபியான இந்த ஐயர்கள் மட்டும் தான்!!!

இப்படியே காலச்சக்கரம் மீண்டும் ஒரு சுற்று சுற்றி, கடவுள் பயம் காட்டி வயிறு நிரப்பும் இந்த களவானிக்கூட்டத்தின் கை ஓங்கும்,
பின் மீண்டும் ஒரு நாள் ஜாதி இந்துக்கள் கோயில் வாசலிலே நின்று விடுவார்கள்!!!

இதனால் இத்தமிழ்ச்சமூகத்திற்க்கு சொல்ல வருக் கருத்து யாதெனில், 

பரமாத்மா ஒன்றும் பரத்தையல்ல இடையில் கமிசன் பெற்றுக்கொண்டு ஐயராலோ அல்லது பரமாத்ம குருவால் கூட்டிக்கொடுப்பதற்க்கு......

உனது உணவு,உனது உடை,உனது கைமதுனம் போலவே கடவுளும் உனது அந்தரங்கப்பேரின்பம்,
கூட்டமாக (mob activity) சென்று செயல்படுத்தும் கேங் ரேப் (gang rape) அல்ல!!!

இறை எனும் உணர்வை நீ தனியாக சென்றுத்தான்  அடையமுடியும் தவிர அதை பெறுவதற்க்கான அனைத்து தகுதிகளும் உரிமைகளும் உனக்குள் இருக்கிறது, எனவே கடவுள் எனும் கருத்தைக்காட்டி பயமுறுத்தும் இந்த ஐயர்களும், ஜக்கி, நித்யா போன்ற ஆன்மிக தொழிலதிபர்களும் நமக்கு தேவையில்லை, 
நமக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒரே  ப்ரபஞ்ச மந்திரம் 
"அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி" மட்டும் தான்!!!!

No comments:

Post a Comment