கடுதாசி எழுதி ரொம்ப நாள் ஆச்சு.......
முன்னாடி எல்லாம் நம்ம வீட்டுக்கும் கடுதாசி வரும்..................
நம்ம வீட்டுல இருந்தும் கடுதாசி வெளில போகும்.
அப்பப்போ எங்க அப்பா கடிதம் எழுதுவாரு எனக்கு காலேஜுல படிக்கிறப்போ......அதுல பின் குறிப்பு மாதிரி அம்மா எழுதுவாங்க ஒரு ஓரமா....."என்னப்பா எப்படி இருக்கன்னு".........
அவுங்க நமக்கு எழுதுன கடுதாசி பாத்து என் தங்கச்சிக்கு எழுதுவேன் என்னமோ நான் ரொம்ப பெரியவன் மாறி பீத்திக்கிட்டு .........:-)
அப்போ எல்லாம் ,"கடுதாசி" எனக்கு வெறும் உறவுகளை சேத்துவைக்கிற ஒரு பாலம் மாதிரி தான் தோனுச்சு.....
அப்புறம் கொஞ்ச கொஞ்சமா கடுதாசியை பத்தி ஆராய்ச்சி செஞ்சா.......கடுதாசிக்கு ரொம்ப பெரிய சக்தி இருந்துருக்குன்னு தெரிஞ்சுச்சு........பல பெருசுக அவுங்க அவுங்களுக்கு தோணுன ஆளுகளுக்கு கடுதாசிய எழுதி அனுப்பி வச்சாக்கா.......அது என்னடான்னா பெரிய பெரிய புரட்சிகளை உண்டாக்கி இருக்கு......பெரிய பெரிய புஸ்தகங்களா வந்து இருக்கு.......
என்னடா இது இந்த கடுதாசிக்கு வந்த மௌசு அப்படின்னு மெய்மறந்து போய் இருந்த வேளைல தான் வந்துச்சு பெரிய ஆபத்து......!!!!
தொலை பேசி,இணையம்,கைத்தொலை பேசி........இப்படி வரிசையாக கடுதாசிக்கு சுப மங்களம் பாடிட்டாங்க மக்கள்.......
நானும் இந்த கடுதாசியை மறந்துட்டேன்..........
திடீர்னு நம்ம நண்பர் விக்நேஸ்வரின்னு,இங்க இணையத்துல தான் இருக்காங்க அவுங்க, என்னங்க மதுரைக்காரரே......எதுனா எழுதுங்கன்னு.....
அப்போ தான் நமக்கு இந்த கடுதாசி மேல இருந்த காதல் மீண்டும் துளிர் விட்டுச்சு.........
ஏன் கடுதாசி எழுதக்கூடாது............
நம்ம மக்களுக்கு,புடிச்சவுங்களுக்கு ,புடிக்காதவுங்களுக்கு...... தெரிஞ்சவுங்களுக்கு தெரியாதவுங்களுக்கு ,அறிஞ்சவுங்களுக்கு அறியாதவுங்களுக்கு,புரிஞ்சவுங்களுக்கு புரியாதவுங்களுக்கு,அப்படின்னு எல்லாத்துக்கும் மானாவாரியா மனசால கடுதாசி எழுதலாமுன்னு முடிவை எடுத்துப்புட்டேன்.....
முடிவு எல்லாம் நல்லத்தான் இருக்கு......ஆனா யாருக்கு மொத கடுதாசி எழுதலாமுன்னு பாத்தா கொளப்பம்!!??
சரி கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிச்சுடுவோம்னு......
கடவுளுக்கு கடுதாசி எழுதி தொடங்கிட்டேன்..........
ம், ஆரம்பிச்சுட்டீங்களா.... வாழ்த்துக்கள். இனி நீங்க யாருக்கு வேணும்னாலும் கடுதாசி போடுங்க. நான் உங்களுக்கு பதில் கடுதாசி போடுறேன்.
ReplyDelete