Wednesday, April 22, 2009

கடவுளுக்கு கடுதாசி......

ஐயா சாமி ஆண்டவா.....ஒனக்கு அனேக கோடி நமஸ்காரம்பா......

இது வரைக்கும் ஒரு தடவை கூட எவன் கண்ணுக்கும் நீ தெரில......

ஏம்ப்பா தெரில அப்படின்னா கண்டவர் விண்டிலை....விண்டவர் கண்டிலை அப்படின்னு சொல்லி நம்ம வாய மூடி புடுரானுங்க......

என்னோட கண்ணுக்கு தெரியாத வரைக்கும் ஒன்னைய கடவுள் நு சொல்றதுக்கு பதிலா "கருத்து" அப்படின்னு கூப்பிடுறேன்.....

தலைவா.......
இந்த பெருசுக எல்லோரும் சொல்றாங்கே..... நீ என்னைய தெனம் கண்காணிச்சுகிட்டு இருக்கியாம்..... நான் என்ன பண்றேன் ஏது பண்றேன்னு.... அதுலையும் யாருக்கும் தெரியாம நான் செய்யுற ரகசியம் கூட ஒனக்கு தெரிஞ்சுருமாம்..... செத்ததுக்கு அப்புறம் எனக்கு பாஸ் மார்க், பெயில் மார்க் வேற போடுவியாம்......

பாஸ் ஆகிட்டா .....நேர சொர்க்கம்......
பெயில் ஆகிட்ட நேர நரகம்....

ஏம்ப்பா.... எல்லாம் வல்ல இறைவனே....... என் அல்லவே...... என் ராமச்சந்திர மூர்த்தியே......

எனக்கு உன்கிட்ட ஒரு கேள்வி.........

குருமாவா நான் சாப்ட்ட கோழியும் பிரியாணியாக நான் சாப்ட ஆடும் இப்போ எந்த சொர்கத்துல, நரகத்துல இருக்கு நீயே சொல்லு ராசா........????

திருவிளையாடல், அவதாரம், மறைநூல் அனுப்புவது,அவ்வப்பொழுது ஆகாசவானியில் கட்டளையிடுவது, தீர்ப்பு நாள் அப்படின்னு பயமுறுத்துவது.....இதை தவிர வேறேதுனும் வேலை இருக்கா ஒனக்கு...... சொல்லு தல.........

என்னைபடைச்ச.......சரி........

அதுக்கு அப்புறம் அழ வச்ச சரி........

அப்புறம் சிரிக்க வச்ச சரி.........

அப்புறம் தெரு நாயா திரிய வச்ச சரி..........

அப்புறம் பாவ புண்ணிய தராசுல வச்சு எட பாத்த சரி.....

அப்புறம் சாவகாசமா என்னை சாவடிச்ச.....

இங்க தான் ஒன்னையே என்னால புரிஞ்சுக்கிற முடில.....நீ என்ன பைத்தியக்காரனா தலை..........

அதுக்கு என்னைய படைக்க இருந்து இருக்கலாமே.....

லூசாப்பா நீ........???!!!

என்னமோ போ......செத்து மேல வந்த அன்னிக்கு ஒன்ன பாத்து நாக்க புடுங்குற மாதிரி கேக்கனும்னு நெனச்சேன்......

ஆனா இப்போ கடுதாசி போட்டு இருக்கேன் திருப்பி பதில் போடு ராசா....

என்றும் உன்
மதுரைக்காரன்.

1 comment: