Wednesday, April 29, 2009

எங்களின் கருப்பு எம்ஜியாருக்கு......

எங்களின் திடீர் ஆபத்பாந்தவன்,
தமிழகத்தை ஆண்டிட துடிக்கும் கருப்பு எம்ஜியார்,
எவ்வளவு தான் குடித்தாலும் துடிக்கும் உணர்வுடன்,கண்களில் ரத்தம் கொதிக்க சுவரில் பாய்ந்தது சிதறும் எங்கள் தானை தலைவனே.......

உங்களுக்கு மதுரையில் இருந்து மிகவும் விசாலமான வேதனையுடன் ஒரு மடல்.

தலைவா,மதுரையில் பிறந்து,தெக்கத்தி தமிழன் என்று உன்னை நீயே பெருமையுடன் கூறி கொள்ளும் தன்மான சிங்கமே,

ஏன் நீ இந்த தேர்தலில் மதுரைலே போட்டி இடக்கூடாது???

அஞ்சாநெஞ்சன் என்ற பட்டத்தை கூட உனக்கு தாரை வார்த்து தர நாங்கள் தயார்.....ஆனா சும்மா உதார் உடான்ஸ் விடும் மதுரையின் அவமான சின்னமான அழகிரியை எதிர்த்து போட்டி இட எவருக்கும் துணிவில்லை உன்னை தவிர..............

ஏன் என்றால் நீ ஒருவன் தான் சொன்ன சொல்லை காப்பாற்றி தனித்து நிற்கிறாய்????

எனக்கு முதல் அமைச்சர் பதவியே போதும் பிரதம மந்திரி பதவி வேணாம் என்று நினைத்து தான் நீ நாடாளுமன்ற தேர்தலில் நிக்க வில்லை என்று சப்பை கட்டு கட்டலாம் என்று நினைத்தால் தயவு செய்து உனது பின்னாலும் முன்னாலும் நின்று உனக்கு எல்லாமுமாக இருக்கும் அன்னை???!!! பிரேமா லதாவை யாவது நிக்க செய் தலைவா........

இந்த ஒன்றை செய்துவிடு தலைவா,நாற்பதும் உனக்கு தான்.................அடுத்த தேர்தலில் இது உனது மச்சான் மேல் சத்யம்.

என்னடா மதுரைல கடுதாசி வரும்னு பாத்தா குண்டு வருதேன்னு நெனச்சு குவாட்டர் அடிச்சு கவுந்து படுத்துராத தலைவா......

உன்னை போன்ற உத்தம் சீலனுக்கு,அஞ்ச நெஞ்சனுக்கு அழகிரி கால் தூசிக்கு சமம்.

அழகிரியை எதிர்த்து ஒன்று நீ மதுரையில் நில் அல்லது அன்னையை ???!!!!! நிக்க சொல் தலைவா.........

உனது கட்டளைக்காக காத்திருக்கும் பயந்தாங்கொள்ளி மதுரைக்காரன்

No comments:

Post a Comment