Wednesday, May 20, 2009

ஈழம் வேண்டும் அனைவருக்கும்.........

தலைவரின் மரண செய்தியை அவை எப்பொழுது புகைப்படமும் வீடியோவும் வந்தனவோ அப்பொழுது சுத்தமாக நம்பவில்லை.

தலைவரை பற்றி நிறைய படித்ததின் மூலமும் அவரின் லட்சிய வேட்கையை அறிந்த பின்பும் அவர் ஒரு master strategist என்பதை அறிந்த பிறகு, அவர் மரணித்திருக்க வாய்ப்பு இல்லை என்பதே எனது அனுமானம்.

இது நடப்பதற்கு முன்னரே இப்படி தான் முடியும் என்று நினைத்தேன்........

ஆனாலும் என்னை போல தலைவரும் சிந்தித்து இருப்பார் என்று கருத தகுதி இல்லை என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

உலகமும், சில நச்சுக்களும், பிரபகாரனால் தான் இவ்வளவு பிரச்சனை என்று பரப்புரை செய்து வருவதாலும்,இந்தியாவின் இத்தனை பெரிய ஆயுத மற்றும் பண உதவியை எதிர்பார்த்திராத காரணத்தினாலும் தலைவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை புலம் பெயர்ந்தவர்களின் உலகளாவிய போராட்டம்.

எனவே எனது அனுமானப்படி தலைவர் இறுதி நாட்களில் ஈழத்தில் இருந்து இருக்க முடியாது என்பதே யூகம்.

ஏனெனில் தான் அழிந்து விட்டதாக இலங்கையும் உலகும் முக்கியமாக இந்தியாவும் நம்பினால் அது ஒரு வேலை அரசியல் ரீதியான தீர்விற்கு முன்னெடுப்பாக இருக்கலாம் என்று நினைத்து இருக்கலாம்.

அது தவிர 30 ஆண்டுகள் தான் போராட்டம் என்று முதலிலே தலைவர் முடிவு எடுத்து இருப்பார் என்றும் யூகிக்கிறேன் அவரது அந்த strategy படி தான் தமது கொடியிலும் முப்பது மூன்று தோட்டாக்கள் வைத்து இருக்கலாம்.இந்த முப்பது மூன்று ஆண்டுகள் கழித்து, ஒன்று ஈழம் கிடைக்கும், ஆயுத போராட்டம் மூலம்...... அல்லது அதற்க்கு பிறகு ஆயுதம் தூக்கி பயனில்லை அரசியல் ரீதியான தீர்வு தான் என்று முன்பே முடிவெடுத்து இருக்கலாம்.

எனவே தனது திட்டப்படி ஆயுதபோராட்டத்தை நிறைவு செய்தாலும், தன்னை மிக தீவிரமாக தேடி வரும் இந்திய வல்லாதிக்கம் மற்றும் இலங்கை அரசின் முன், தான் மரணிப்பது தான் கோபத்தையும் வன் சினத்தையும் குறைக்கும், தவிர்த்து, நடுநிலையாளர்கள் என்று தம்மை கூறி கொள்பவர்கள், பிரபாகரன் போன பிறகு ஈழம் என்ன ஆகும்??? ஈழ தமிழர்கள் கதி என்ன?? என்று யோசிப்பார்கள் என்றும் தலைவர் யோசித்து இருக்கலாம்.

எனவே இந்த அத்தனையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தலைவர் தன்னை அழித்து கொள்வது போல ஒரு காட்சியை சித்தரித்து இன்று உலகம் முன்னும், இந்தியா முன்னும், ஈழ தமிழர்கள் முன்னும், புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும், ஒரு மிகபெரிய கேள்வி எழ வைத்து இருக்கிறார். அது .....

இனி அடுத்து என்ன?????

இது மிகப்பெரிய கேள்வி,மற்றும் மிகப்பெரிய பொறுப்பு யார் சுமப்பார்கள்.?????

எனவே இந்த கேள்விக்கு அடுத்த ஓரிரு வருடத்திற்குள் பதில் கிடைத்து விடும்.

அது வரை தலைவர் பத்திரமாக தமது அடுத்த திட்டத்திற்கான செயல் வடிவங்களில் இறங்கி இருப்பார் என்பது தான் எனது யூகம்.

உலகத்தால் முடிக்க முடியாத போரை தானே முடித்து வைத்தார் தலைவர்.

ஆனால் போருக்கு பின்னர் நிகழப்போகும் விளைவுகளின் மூலம் தான் தலைவரின் 'சுய இருப்பு " அறிவிப்பதாக இருக்கும் என்பது எனது யூகம்.

எனவே நாம் நமது தலைவரின் வழியில் போராட்டங்களை இன்னும் தனி ஈழம் என்பதை எப்படியாவது நிர்ணயிக்க வேண்டும்

No comments:

Post a Comment