Thursday, December 02, 2010

நானும் எனது தனிமையும்.......

நீ
கைகளுக்குள்
கட்டுப்படாத
காற்றானால்
சுவாசிக்கும்
நாசியாய் நான்

இதழ்களின்
ஓரங்களில்
விழித்திருக்கும்
எனது ஏக்கங்களின்
தாகம் தீர்க்கும்
மழையாய்
உனது முத்தம்

பேரிரைச்சாலாய்
எனது காதலை
உன்னிடம்
ஓயாமல் ஓலமிடும்
அலையாய்
நானிருந்தாலும்
மௌனத்தையே
மொழியாக்கிய
கரையாய்
நீ.........


வெற்றிட வெறுமையாய்
நானிருந்தாலும்
நெருக்கி நிரப்பும்
காற்றாய்
நீ


நீ
வீசியெறிந்த
புன்னகையை எல்லாம்
சேகரிக்கும்
கிடங்காய்
எனது மனம்


விட்டு
விட்டு
துடிக்குது
இதயம்
விட்ட இடத்திலெல்லாம்
நீ.....


உறங்க
மறுத்த
எனது இமைகளில்
சொகுசாய் நீ

உரசிச்சென்ற
மூச்சுக்காற்று,
உலுக்கிஎடுத்த
பார்வை,
உயிர் கிள்ளிய
மௌனம்,
உடைத்தெறிந்த
நகம்,
உதறி தள்ளிய
காதல்,
எல்லாமே கவிதை

வெற்றிட வெறுமையாய்
நானிருந்தாலும்
நெருக்கி நிரப்பும்
காற்றாய்
நீ

No comments:

Post a Comment