Thursday, December 02, 2010

(”இணைய”) பகுத்தறிவு!!!

பகுத்தறிவு அப்படின்னா என்ன அப்படின்னே சரியான புரிதல் இல்லை.......... நமக்கு(எனக்குன்னும் புரிஞ்சிக்கிரலாம், நம்ம எல்லாத்துக்கும்னும் புரிஞ்சிக்கிரலாம்)

அதை பற்றிய சரியான புரிதலும் தெரிதலும் இல்லாத போது அதை பற்றி எப்படி இங்கு எல்லாராலும் மிக வீரியமாக விவாதிக்க முடிகிறது என்று எனக்குள் பல நாட்களாக குடைந்துகொண்டிருக்கிறது கேள்விப்புழு ஒன்று........

அப்புறம் எப்படி இத பத்தி நம்ம விவாதிக்க முடியும்.

ஆதலினால் நானும் இங்கு அதைப்பற்றி விவாதிக்க போகிறது இல்லை
இங்கே நான் பதிவது வெறும் என்னுடைய மனதில் விழுந்த சில கேள்வி மழைத்துளிகள் நீராவியாய் மேலே செல்வதற்கு முன் எனக்குள்ளே அவற்றை நன்கு அசை போட்டு பார்க்கும் ஒரு ஆசை தான்.

பொது புத்தி, சுய புத்தி என்ற இரண்டுக்கிடையில் கெடந்து நம்ம மக்கள் படுற பாடு இருக்கே....ரொம்ப கஷ்டம்......

சுய புத்தி,
கடவுள,
மதத்தை,
சாதிய
இப்படி இன்னும் எல்லாத்தையும் நம்புறதுக்கு தயாரா இருந்தாலும்,சில சமயங்களில் நம்பி அதன் பின் போனாலும்,

பொது புத்தி ஒடனே.....நம்ம காதுகிட்ட குசுகுசுன்னு ஒன்னு சொல்லும்பாருங்க.......

டே ராசா..............

நீ இப்படி எல்லாம் செஞ்சாலும் வெளில நாலு பேரு கிட்ட பேசுறப்போ....இப்படி "கடவுள் இல்லை" "சாதி இல்லை" "மதம் இல்லை" அப்படின்னு சொல்லனும்,பேசனும்,எழுதனும்!!! இல்லாட்டி ஒன்னைய ஆட்டைக்கு சேத்துக்குற மாட்டாங்கே!!!

இப்படி ஒரு பிட் போடுறதுல நமக்கே ஒரு அதீத தன்முனைப்பு......

தான் மத்தவுங்கள மாதிரி இல்லை, "நான் ஒரு தனிப்பிறவி" அல்லது "நான் ஒரு முற்போக்கு சிந்தனைக்கு சொந்தக்காரன்" அப்படின்ற தன்முனைப்பு....... ஒன்னு இருக்கு அதுக்கு தீனி போடுற மாதிரி காரியம் செய்யனும் அப்படின்னு பொது புத்தி சொல்லும்.......

அந்த தன்முனைப்பு என்ற யானைக்கு தீனி போட்டு தீனி போட்டு நம்மள நாமே ஏமாத்திகிட்டு நமக்குள்ளேயே......ஒரு கருத்துபேதம் ஏற்ப்பட்டு,முரண்பட்டு, அப்புறம் நம்மள நாமளே சமாதனப்படுத்திக்கிட்டு கடேசில அங்கிட்டும் போக முடியாம,இங்கிட்டும் போக முடியாம,.....??!!
ஷ்ஷப்பா........

பகுத்தறிவு அப்படின்னா கண்ண மூடிக்கிட்டு கடவுள எதிர்க்கிறது, அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட மதம் பரவா இல்லை ஒன்னோட மதம் தான் கேவலம் அப்படின்னு சொல்றது....................

சாமியே இல்ல அப்படின்னா அப்புறம் என்ன என்னோட மதம் ஒன்னோட மதம்.????

ரௌத்திரத்துடன் "தன்னோட சாதி அடையாளத்துடன்" பிற சாதியை எதிர்க்கிறது.......

கேட்டா.....பகுத்தறிவு எங்களுக்கு வர விடாம ”இந்த” சாதிக்காரவுக தான் தடுத்தாங்க அப்படின்னு சொல்றது.........!!!!

ஏம்பா இப்போத்தான் ஒனக்கு பகுத்தறிவு வந்துருச்சே அப்புறம் ஏன் நீ போய் திருப்பியும் அந்த சாதி சனியனை தொங்கிகிட்டு கெடக்குற...அப்படின்னு கேட்டா சாதியம் இப்படி தான் பின் பக்கமா வரும்னு நம்ம கேள்விக்கே u-turn போட்டு திருப்பி விட்ருவாங்கே.....!!!

*சாதியே இல்ல அப்படின்னு சொல்லிட்டு அப்புறம் என்ன ”என்னோட” சாதி ”ஒன்னோட” சாதி.....???

*கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகம் கூட ஒரு வகையான நம்பிக்கையில் திளைத்திருக்கும் மதம்தானோ என்னவோ.....!!!

*பகுத்தறிந்து உணர்ந்தபின் கடவுளின் தேவை யாருக்கும் இராது ஆராயவும்,விவாதிக்கவும் ஆதரிக்கவும் எதிர்க்கவும்.

*பகுத்தறிவு என்பது பேசுவது அல்ல உணர்வது.......!!!!
அப்படி என்றால் கடவுள் கூட அப்படித்தானோ..........
எனில் பகுத்தறிவும் கடவுளும் ஒன்று,நாத்திகமும் மதமும் ஒன்றா?????

*பார்ப்பனியத்தை கூரிய வாள் கொண்டு எதிர்க்கும் so called பகுத்தறிவு ஆதிக்க சாதி முன் வால் சுருட்டி அடங்குவது ஏன்????

*பீயள்ளும் நண்பரின் துயர் துடைக்க பார்ப்பானையும் அரசையும் கடவுளையும் மத நூலையும் குறை சொல்லி சட்டையை பிடிக்கும் நாமும் நம்மை சார்ந்த்தவரும் இது வரை என்ன செய்தோம்,சத்தம் போட்டு பேசியதை தவிர்த்து........????

*சமூக நீதிதான் எங்கள் குறிக்கோள் என்று சொல்லிக்கொண்டே இட ஒதுக்கீடுக்கும் ஆதரவு.????

*மொத்தமா சாதிக்கு,மத்த்துக்கு,முழுக்கு போடுறதுதானே முற்போக்கு!!! இப்படி பல கேள்விகள் எனக்குள்!!

அவுங்கவுங்களுக்கு பகுத்தறிவ எப்படி எப்படி உபயோகப்படுத்தலாமோ அப்படி அப்படி "படுத்துகிட்டு" இருக்குறவுஙக கிட்ட கேக்கலாம்னு நெனச்சா......

நம்மள எதிரி மாதிரி ”பாப்பா’ஙகளோ (பார்ப்பான் இல்லிங்கே..).....இல்லாட்டி,
இவன் ”பிற்போக்குக்காரன்”!!........ சொல்லிடுவாஙகளோ அப்படின்னு ஒரு எண்ணம்.

யார் சொன்னதையும் கேக்காது ஒன்னோட சுய புத்திக்கு எது சரின்னு தோணுதோ அதை தைரியமா செய்
அதுவே பகுத்தறிவு!! இப்படி கூட ஒருத்தர் என் கிட்ட சொன்னார்!!

அப்படின்னா என்னோட மனசுக்கு இப்போ நான் சொன்னதுதான் பகுத்தறிவு அப்படின்னு தோனுது, அப்போ நான் ஒரு ”பகுத்தறிவு” வாதிதானே.......

அய்யா பெரியார் சொன்ன பகுத்தறிவு இந்த சாதி மாதங்கள் கடந்த ஒரு புரிதல் ஆனா அது எனக்கும் சரிவர இல்லை,

பெரியாரைப் பின்பற்றுகிறேன் என்பது பெரியாரை மட்டும், அவரது கருத்தியலை மட்டும் பின் தொடர்வதாகும், பெரியாரியல் என்பது, பல்வேறு வளர்வு நிலைகளுக்கு ஆன காரணிகளைக் கண்டறிந்து, மென்மேலும் மொழியையும் இனத்தையும் வளர்த்தெடுத்தலே அன்றி, கண்மூடித் தனமாக அவரின் செய்கைகளை ஏற்றுக் கொண்டு, தனி மனித வழி பாடு செய்வது அல்ல

ஐயா பெரியார் பகுத்தறிவு கடந்து,புரட்சியால் நம்மை புரட்டி போடுகிறார்.ஒரு பகுத்தறிவுவாதி, மாற்றுத்தீர்வு குறித்துஅதிகம் கவனம் செலுத்துவதில் கூட பெரியார் காத்திரமாக முரண்படுகிறார்.

”மதத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் என்ன வைப்பது?” என்கிற கேள்வி எழும்போது அவர் சொல்கிறார், ’’நடுவீட்டில் மலம் நாறுகிறது, தூக்கி எறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்கிறாயே”.

கட்டமைப்புகளின் மீதான விமர்சனமும், கட்டவிழ்ப்புகளுமே அவருக்கு முக்கியமாக இருந்த்தே ஒழிய. வேறொரு வகையான கட்டமைப்பை நிறுவுதல்,அல்லது மாற்று தீர்வு, என்பது கூட வேறு வகையான அதிகாரச் செயற்பாட்டிற்கு வழிவகுக்கலாம் என்கிற புரிதல் இருந்தது அவருக்கு.

கோப்பைகளை நிரப்புவதை விட கோப்பைகளை உடைப்பதே என் வழி!!!! என்று சொன்ன ஒஷோ வை நினைவுபடுத்துகிறார் ஐயா பெரியார்!!

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எனக்கு அந்த மாற்றத்தை குறித்த தெளிந்த தெரிதல் இருக்கிறதா?? புரிந்துணர்வு,மற்றும் உள்ளுணர்வு மற்றும் நேர்மை இருத்தல் அவசியமாகிறது.மாற்றம் குறித்த இவை அனைத்தும் என்னிடம் இருப்பி்ன் கண்டிப்பாக அம்மாற்றம் குறித்த பார்வை விசாலமாகும் .

நெலம இப்படி இருக்குறப்போ நான் யாருக்கு போய் பகுத்தறிவ பத்தி பாடம் எடுக்குறது.....இல்லாட்டி எனக்கு போய் யாரு பகுத்தறிவு பாடம் எடுக்க முடியும்.

No comments:

Post a Comment