என் நினைவில் நனையும்
மழை தினங்கள் ஏராளம்!!
சாளரத்தின் வழி
சாரல்களை
உரசியபடி உறிஞ்சி குடித்த
தேநீர் தினங்கள்!!!
உயிர் நனைய
மழை நனைந்து
பின்
உயிர் ஒழுகிய
ஜலதோஷ தினங்கள்!!!
தூறல் தானே என எண்ணி
வெளியே செல்ல.....
நீரில் கண் தெரியாது....
சாலை என நினைத்து
சாக்கடையில் விழுந்த
பய தினங்கள்!!!
தோழியோடு முதல
தினம்
கடல் காண போக.....
என்னையும் அவளையும்
இணைத்த
காதல் தினங்கள்!!!
இப்படி
எத்தனையோ மழை தினங்கள்
மனதில் மலர்ந்தாலும்,
என்னை மழை போல
கரைய வைத்த
மழை தினம்.....
அன்றொருநாள்
சாலையின்
சகதியின் ஓரத்தில்
மழையில்
ஒதுங்கி உறங்கிய
சிறுவனை கேட்டேன்!!
சோகம் இல்லையா தம்பி.......???
அவன் சொன்னது ”வார்த்தை” அல்ல ”வாழ்க்கை”!!!
"நாளைக்கு காலைல தான் மழை நின்னு போயடும்ள அண்ணே".....
No comments:
Post a Comment