Thursday, December 02, 2010

தமிழ் மண்ணே....என் நாடே....

கசிந்து வழியும்
கண்ணீரை கழுவி
கண்ணுக்குள் தீ வளர்த்து
காக்கும்
தாய் சேய் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம் !!!!
காசு தேடி
வாழ்வு தொலைத்து
வியர்வையோடு கண்ணீரும்
உருண்டோடி கவளச்சோறு
உண்ணும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம் !!!
காக்கும் கடவுளரும்
கண்ணயர
கன்னியரின் கற்பினை
கருவேப்பிலையாக்கும்
கலாச்சார குப்பையில்
உழலும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம்!!!
எனது அறிவெனும்
கற்பை காசுக்கு
கைகழுவிய
விபச்சார விடுதியிலிருந்து
விடுதலையாக
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் ஞாபகம்!!!!

1 comment: