Thursday, June 28, 2012

பிரபாகரனின் உயிலும், சீமானும், இன்ன பிறரும்.....

சீமான் என்னவோ புலிபிரதிநிதி போலவும்,சீமானை எதிர்ப்பதற்க்கும் விமர்சிப்பதற்க்கும் புலிகளையும் புலித்தலைமையையும் விமர்சிக்கும் போக்கு மிக கேவலமான அரசியல்!!!



பிரபாகரன் என்ன போகும்போது புலிக்கொடியையும்,புலிகள் இயக்கத்தையும்,ஈழப்போரையும்,தமிழ்தேசியத்தையும் சீமான் கையில் "உயில்" எழுதி கொடுத்துவிட்டு போனாரா???



சீமான் தன்னைத்தானே அது போல பாவித்து கொண்டாரானால் அது யாருடைய சிறுபிள்ளைத்தனம்???



"நாம்தமிழர்கள்" இயக்கத்தவர்கள் தங்களை "புலிக்குட்டியாக" நினைத்துகொண்டாரென்றார்கள் என்றால் அது என்ன புலிகள் இயக்கத்தின் தவறா???



புலியையும் அதன் தலைமையையும் வைத்து யார்தான் "கொள்முதல்" செய்யவில்லை தமிழகத்தில்??



இந்திராவில் தொடங்கி இன்று சீமான் வரை அவர்களை தங்கள் சுய லாபத்திற்க்காக பயன்படுத்தாதவர்கள் யாரேனும் உண்டோ, "சார்ந்த்தோ" அல்லது "முரண்பட்டோ" எல்லோரும் அரசியல்,பொருளாதார,சமூக கொள்முதல் செய்தவர்கள் தான்,



அப்படியிருக்கையில் "சீமானும்" அவரை "எதிர்ப்பவர்களும்" அனாவசியமாக இதனுள் புலிகளையும் ஈழத்தையும் இணைத்து கொச்சைபடுத்துவது என்பது தன் விரலை எடுத்து தன் கண்ணையேகுத்தி கொள்வதற்க்கீடாகும்.



கண்டிப்பாக புலிகளும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்க்கு அப்பாற்ப்பட்டவற்கள் அல்ல!!!



ஆனால் "ஈழம்" எந்தவித இரண்டாம்கருத்துக்கும் அப்பாற்ப்பட்டது. அது அம்மக்களின் உரிமை,



அப்படியிருக்கையில் அதில் உள்புகுந்து அரசியல் செய்ய எவருக்கும் என்மட்டில் அருகதை இல்லை!!!



ஈழத்தையும், தமிழ்தேசியத்தையும் "தமிழ்தேசியதமிழர்கள்" தான் குழப்பிகொள்கிறார்கள் என்றால், "திராவிடதமிழர்களாகிய" நீங்களும் அவர்களோடு மல்லுகட்டுவதென்பது எந்தவித "அரசியல்தத்துவ" ஞானம்??



"தமிழ்தேசிய தமிழர்களும்" "திராவிட தமிழர்களும்" உங்களுக்கான ஓட்டு அரசியல் ரீதியான கலகத்தில் கள வலியும்,நில வலியும்,தாங்கி ரத்தம் சிந்தி,உயிர் நீத்து,இன்னும் மிச்ச கனவையும் சுமந்து நிற்க்கும் ஈழ மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாது,அடுத்த தேர்தலில் யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்தினாலே போதும் ஈழ மக்களுக்கும்,அவர்களுக்காக போராடிய,போராடுகின்ற, போராடும் பலருக்கும் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

No comments:

Post a Comment