மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக ஆட்சி பொறுப்பிலிருக்கும் ஒரு அரசு, அந்த மக்களுக்காக தீட்டப்பட்ட ஒரு திட்டத்தை, அதே மக்கள் தங்களுக்கு ஒவ்வாது அல்லது தொல்லை தருமென்று நம்பி அத்திட்டத்தில் உடன்பாடில்லாது அதை கைவிடுமாறு அரசை கேட்டுக்கொண்டும்,அதை சற்றும் மதிக்காது அதே திட்டத்தை மக்களின் நலனிற்க்காக என்று மீண்டும் மீண்டும் அதை நடைமுறைப்படுத்தும்பொழுது,அத் திட்டத்தை நிறுத்தக்கோரி அவர்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்தை தனது சதியால் வன்முறையாக்கி மக்கள் அரசாங்கத்திற்க்கு எதிராக போர் தொடுக்கிறார்கள் என்று பொய்யாய் அழுது புலம்பும் ஒரு அரசு எப்படி மக்களரசு எனப்படும்.
அங்கு இருக்கும் மக்கள் ஒருவரும் தனது வீட்டிற்க்கு குடி தண்ணிர் வரவில்லை என்றோ,சாலை போடவேண்டும் என்றோ வீதிக்கு வரவில்லை, தங்களுக்கும், தங்களை ஒத்த சக மனிதருக்கும்,தன்னுடைய வருங்கால சந்ததியினர்க்கும், தங்களது வாழ்வாதாரங்க்களுக்கு தீங்கு விளைந்து விடக்கூடாது என்ற பொது நன்மைக்காக போராடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில்,
1,அரசு தன் பக்கத்து நியாயங்களை சரியாக எடுத்து சொல்லி மக்களை ஒரு புரிந்துணர்வு நிலைக்கு கொண்டு வந்து இருக்க வேண்டும்.
2,மக்களின் ஐயப்பாட்டை, நிபுணர்கள்,துறை வல்லுனர்களை கொண்டு தீர்த்து வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய இயலாத நிலையில்
1,தனது திட்டத்திலிருக்கும் தவற்றையுணர்ந்து அதை சரி செய்து மீண்டும் மக்களிடம் சென்றிருக்கவேண்டும்.
அல்லது
2,அத்திட்டம் எத்தனை கோடி உட்கொண்டிருந்தாலும் மக்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எதையும் மக்களுக்கான அரசு கைவிட்டு இருக்க வேண்டும்.
அதைவிடுத்து, அரசு திட்டம் தீட்டியாகிவிட்டாயிற்று இனி அது எத்தகைய தீங்கு/ அழிவு ஏற்ப்படுத்தினாலும் சரி, ஏற்ப்படுத்தாவிட்டாலும் சரி,மக்களாகிய நீ இதில் எதை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி எனக்கு அது பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ இல்லை எனவே இனி இதை நீ ஏற்றுக்கொண்டுதானாகவேண்டும் என்ற அராஜக போக்கை சர்வாதிகார போக்கைஅரசு கொண்டு இருந்தால் அதை அந்த அரசை அதன் தலைமையை எப்படி நம்பமுடியும்?
அணு மின் நிலையத்தால் நன்மை தீமை இரண்டும் இருக்க வாய்ப்பு இருக்கிறது,இல்லாமலில்லை,ஆனால் தனது மடியில் கனமில்லாமலிருப்பின் அதை சரி படுத்தி தெளிவுபடுத்தவேண்டியது தானே தீர்வு????
அதை விடுத்து அந்த அணுமின் நிலையத்தால் பிரச்சனை இல்லையென்று சொல்லமுடியுமா என்று கேட்டால், கேள்வி கேட்பவனுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வந்து இருக்கிறது எதிர்க்கட்ச்சிக்காரன் என்று பதில் சொல்லுவது எவ்வளவு பெரிய நேர்மையற்றத்தனம்???
அங்கு இருக்கும் சாதராண மீன்பிடி மக்களை ஏதோ இந்திய தேசத்தின் மீது போர்தொடுக்க துடிக்கும் அன்னிய சக்தி போல் பாவித்து அவர்கள் மீது தேசதுரோக மற்றும் போர்குற்ற சட்டங்க்களை பிரயோகிப்பது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
உலகத்திலிருக்கும் ஆகப்பெரிய லாபியிஸ்டுக்களும்,ராஜதந்திரசாணக்கியர்களும், பேராசை காட்டி இந்தியாவின் ஒரு கடைக்கோடி கிராமத்தை தங்களின் ஆராய்ச்சி கிடங்க்காக பயன்படுத்த ஊழலில் பெருத்த இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையும் அவர்களிடம் கமிஸன் வாங்கி ஊமையாக இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும், நடுத்தர மக்களின் காவலர்களாக தம்மை காட்டிக்கொண்டு,அவர்களை தங்கள் பாதுகாப்பு கேடையங்க்களாக உபயோகித்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மிக கேவலமான பரிதாபமான சுய அறிவற்ற ஆனால் சுய நலம் மிகுந்த ஒரு இனம் நடுத்தர மக்கள் என்ற இனம் அவனுக்காகவே இயங்கும் தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்கள்,அவனை “நனவாகாத கனவுகளையே” காட்டி அற்ப சந்தோசப்படுத்தியே, ஒரு மாயையில் வைத்தே தன் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளும் இன்று சுய நலமில்லா ஒரு மக்கள்போராட்டத்தை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மிக வேதனையாகத்தான் இருக்கிறது.
அணு மின் நிலையம் நல்லதா கெட்டதா என்பதை நீதி தேவன் போல சொல்ல நமக்கு ஆழ்ந்த அறிவு இல்லையென்றாலும்,இந்த அணுமின் நிலையத்தை வைத்து கொள்ளை லாபம் அடிக்கும் அரசியல்வாதியும்,அதை செய்தியாக்கி காசு சம்பாதிக்கும் ஊடகங்களும் இவர்கள் இருவரின் அதி நவீன நாடக வலையில் எப்பொழுதும் விழுந்து பின் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்யும் இந்திய நடுத்தர வர்க்கமும் இந்த தேசத்தை இன்னும் இன்னும் வேகமாக புதை குழியில் தள்ளிவிடுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.
No comments:
Post a Comment