Monday, November 26, 2012

எம்பொழப்பு!!!!!

எட்டி நின்னு வெக்கப்படும்
உன் மூச்சுக்காத்து,
பின்னங்கழுத்து புழுவாய் நெளியும்
உன் ஒத்தை முடி,
குட்டிக்குட்டி மடுவாய்
உன்
கன்னப்பருவிரண்டு,
எச்சில்பட்டு எச்சில்பட்டு
எரிகனலாய்
உன் உதட்டுசிவப்பு,
கட்டபொம்மன் கட்டாத
உன் "வரி"கழுத்து,
சென்சாரில் வெட்டமுடியாத
உன்
குரும்படமிரண்டு,
இப்படி எல்லாமா சேத்து
என்ன பெரும்பாடு படுத்துதடி
பொல்லாத காதலிப்போ
சொல்லாம பெனாத்துதடி!!
குப்புற படுத்தாலும் குருங்கனா ஒன்னு
ஓயாம உலுக்குதடி
சொல்லிடலாம்னு வெரசா வார்த்த தொண்டக்குழி வரைக்கும் வந்தாலும்
வெறும்பய நீ....
ஒனக்கு ஏண்டா
வேண்டாத பெரும்வேலைன்னு
பொடனிலேயே போட்டுச்சு
ஏம்பொழப்பு!!!!

No comments:

Post a Comment