Monday, November 26, 2012
கரையோரங்களில்.......
உன்னையும்
என்னையும்
தவிர்த்த
தனிமை,
உனக்கும்
எனக்குமிடையிலான
தனிமை,
பிசைந்தெடுக்கும்
மௌனத்தை
எனக்களித்த
தனிமை,
என்னை
என்னிடமிருந்து
தூரப்படுத்திய
தனிமை,
எனக்குள்ளிருக்கும்
என்னை
எனக்கு
படிப்பித்த
தனிமை,
இப்படி
என்னை
எனது தனிமைக்குள்ளும்,
தனிமையை
என்னுள்ளேயும்
தள்ளிவிட்ட
நீ
மட்டும்
என்னுடனில்லை...
தனிமையுடனான எனது உறவு
எப்பொழுதும்
கோரப்பேயின்
கைகளுக்குள்ளான
கைக்குழந்தையுடனானதாக தான்
இருந்திருக்கிறது.....
தனிமை எப்பொழுதும்
எல்லோரையும் ஒரே மாதிரி வரவேற்பதுமில்லை,
உபசரிப்பதுமில்லை.
தனிமையின்
எந்த பகுதிக்கும் சென்று
பார்த்தாலும்
சூனியம்தான்.
தனிமையை இலகுவாக்கவல்ல
தொழில்நுட்பம இன்னும்
வந்த பாடில்லை,
ஆனாலும்
சிறிய நம்பிக்கை கொண்டு
தனிமையின் நீண்ட இலக்குகளை நோக்கிய
எனது இரகசியப் பயணங்கள்
எப்பொழுதும்
துரத்ருஷ்டவசமாக
எனக்கு
தோல்வியாகவே
அமைந்துவிடுகிறது....
தனிமைப்பயனங்களின்
பொதுவான துயரவிதியிது.....
மரண வீட்டிற்கு
மேற்கொள்ளும்
பயணத்தை ஒத்ததாக
மர்மமும் அச்சமும் மட்டும் இருளுடன் இறைந்து கிடந்தது
தனிமையை நோக்கிய
எனது
பயணம்...
தனிமைபற்றிய
கற்பனைகளும் யதார்த்தங்களும் ஒன்றுக்கொன்று
எதிர்த்திசையில் நிற்கின்றன
எப்பொழுதும்...
தனிமையின் கரையோரங்களில்,
பகிரங்கமாக திரிவதற்கு
அச்சப்பட்டுகொண்டே இருக்கவேண்டியதாக இருக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment