மாடு வைஃபையுடன் இணைக்கப்பட்ட ஏருடன் நிலத்தில் உழுதது.......
தனது விளைநிலத்தில் "கிளவுட் சீடிங்க்" முறைப்படி அமோக விளைச்சல் காரணமாக "மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடிக்கும்" என்ற கேப்ஸனுடன் கூடிய செல்ஃபியை டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் ஸ்டேடஸ் அப்டேட் செய்தார் நம்ம விவசாயி....
ஆர்கானிக் ஃபார்மிங் எல்லாம் ஓல்ட் ஃபேஸன் இன்னிக்கு ஹாட் டாபிக் " "டிஜிடலைஸ்ட் ஃபார்மிங்க்" தான் என்று உலக விஞ்ஞானிக்கு விவரம் தெரிவித்தார் நமது விவசாய மந்திரி!!!!!
விர்சுவல் ரியாலிட்டி முறைப்படி கங்கையும் காவிரியும் இணைக்கப்பட்டு இந்திய தேசியமே வெர்சுவல் பாசுமதி அரிசியை கூகுள் டிரைவில் டவுன்லோட் செய்து பிரியாணி செய்து உண்டு மகிழ்ந்தது.....
தக்காளிய எந்த மெசினில்
செய்ராங்கன்னு எம்பொண்ணு அப்ப கேட்டது இன்னிக்கு உண்மையாகிருச்சுன்னு உருகித்தவிக்கிறார் "தக்காளி மேனுஃபாக்சுரிங்" மெசினை கண்டுபிடித்த பெண்ணின் தந்தை இன்றைய "டெட் ( TED)டாக்" கில்
பீயள்ளும் நண்பர் இப்பொழுது "புளூ டூத் ஆக்டிவேட்டட் கேட்ஜட்" மூலமாகத்தான் இன்னும் பீயள்ளிக்கொண்டு இருக்கிறார்.
உத்திரபுரத்தின் பெயர் டிஜிட்டல் புரம் என்று மாற்றப்பட்டு, அங்கு வெர்ச்சுவல் சுவர்கள் எழுப்பப்பட்டு.... " ஆங்ரி ஜாதி" ஆப் மூலமாக வெர்ச்சுவலாகவே சுவர்கள் உடைக்கப்படுகிறது.....
புளூ டூத் ஆக்டிவேடட் பெனிஸ் மூலமாக பெண்கள் இன்னும் பாலுறவு பலாத்காரத்திற்க்கு ஆளாகிறார்கள்......
#டிஜிடல்
No comments:
Post a Comment