Friday, October 23, 2015

விஜயகாந்தும் சதிக்கோட்பாடும்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில் இருந்து, நடிகர் சங்க தலைவராக இருந்து ஓரளவிற்க்குத்தெளிவாகவே இருந்த விஜயகாந்திற்க்கு, மது போதையுடன் அரசியல் மற்றும் பதவி போதையும் சேர்த்து ஏற்றி விட்டது யாராயிருக்கும்.

சைக்கிளுக்கு இருக்கும் இரு சக்கரம் போல விஜயகாந்தின் கூடவே இருக்கும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஸிற்க்கும், விஜயகாந்தின் இந்த பதவி மற்றும் அரசியல் ஆர்வத்திற்க்கு எவ்வளவு தூரம் தூண்டுகோளாக இருந்து இருக்கினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

விஜயகாந்தை ஒரு அரசியல் பிம்பமாக உருவகப்படுத்தி, உருமாற்றி பிரமாண்டமான ஒரு பிராண்டாக மாற்றி அவரின் பல்வேறு அரசியல் சதுரங்க ஆடுகளத்தில் ஒரு மிக முக்கிய பங்கு வகித்து அவரை எதிர்க்கட்சித்தலைவர் வரை எடுத்துச்சென்ற வரை இவ்விருவரின் பங்கும் அலாதியானது.

எங்கு சென்றாலும் இவர்கள் இருவரின் கண்ணசைவிலும் முகபாவத்திலும், உடல்மொழியிலும் விஜயகாந்தை ஆட்டுவிக்கும் ஒரு பாவனை தெரிவதை அவர்களாலும் தவிர்க்கமுடியவில்லை.
பிரேமலதாவும், சுதேசும் விஜயகாந்தை ஆட்டுவிக்கிறார்களா அல்லது இவர்கள் இருவரின் தயவு இன்றி விஜய காந்தே இல்லையா என்பது தான் எனது இந்த கட்டுரையின் மையக்கருத்து!!!

காலம்காலமாக அரசியலில் சதிகோட்பாடுகளுக்கு பஞ்சமில்லை என்பது நாமெல்லாம் அறிந்ததே. 

அந்த வகையில், விஜயகாந்தும் தமிழக அரசியல் சூழலில் ஒரு சதிக்கோட்பாடிற்க்குள் மாட்டிக்கொண்டுவிட்டாரோ என்ற ஐயமே எனக்கு ஏற்படுகிறது.

மதுபோதையின் பிடியில் இருக்கும் ஒரு கணவனை எப்பாடு பட்டாலும் எந்த வகையிலாவது எதாவது செய்து காப்பாற்றத்தான் துடிப்பாள் ஒரு மனைவி... அப்படி முடியாத பட்சத்தில், அவரை விட்டு விலகி விடுவார்.

ஆனால் பிரேமலதா விஜயகாந்தின்  எவ்வித நடவடிக்கையும் ஒரு மனைவியின் உரிமையை நிலைநாட்டுவதாக இருப்பதாக நமக்குத்தெரியவில்லை, மாறாக விஜயகாந்தை முடிந்த வரை மதுவிற்க்கு ஒரு அடிமையாகவே வைத்து பின் அவரை தனக்கும் தனது தம்பிக்கும் அடிமையாக வைத்திருப்பதாகவே நம்பத்தோன்றுகிறது!!!

பிரேமலதா, விஜயகாந்திற்க்கு உதவியாக இருப்பதைப்போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி ஆனால் நிஜத்தில், விஜயகாந்த் என்ற பிம்பத்தின் உதவியால் தன்னை முன்னிலைப்படுத்தி ஒரு தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்க்கான அனைத்து முன்னெடுப்பகளையும் அவர் செய்வதாகவே தெரிகிறது!!!

பிரேமலாதா மற்றும் சுதீஸின், கண்ணசைவிலும், கையசைப்பிலும், ஆட்டுவிப்பதற்க்குக் ஒரு பொம்மலாட்ட பொம்மைக்கான அனைத்து தகுதிகளுடன் ஆடும் விஜயகாந்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை....

No comments:

Post a Comment