Friday, October 23, 2015

மதுக்கடைகளும் மக்களின்ராஜாக்களும்

திடீர் புரட்சியாளர்களை உருவாக்குவதில் நமது மக்களுக்கு இணை நமது மக்கள் மட்டுமே... நமது மக்களின் அந்த திடீர் உத்வேகத்திற்க்கு தூபம் போடும் மிகச்சரியான நாரத வேலையை செய்து உசுப்பேத்திவிடுவதில் நமது ஊடகங்களின் நிலை மிக முக்கியமானது.

தற்பொழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பூரண மதுவிலக்கு போரட்டத்தையே எடுத்துக்கொள்வோம், மிக நியாயமான போராட்டம்தான் இல்லையென்று சொல்வதிற்கில்லை.... 

ஆனான் நேற்றுவரை இதற்க்காக போராடி வரும் அந்த "சுயபிரகடன காந்தியவாதியை" யார்னே தெரியாத நம் மக்கள் தான் இன்று அவரை எதோ மதுவை ஒழிக்கவந்த தேவதூதன் போல உணர்கிறார்கள் ஊடகங்களிலும் சித்தரிக்கிறார்கள். அரசியல் லாபமடிக்க "எப்பாடா எழவு விழும் அதுல நாம எப்டிடா எந்துருச்சு நிக்கிறதுன்னு" இருக்குற ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் உடனே அந்த ஸோ கால்ட் காந்தியவாதியின் போட்டாவை கையில் வைத்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

நிற்க, 

அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்திவோம் என்று அறிக்கை விட்டிருக்கும் வாய்ச்சொல் வீரராம் கருணாநிதி, ஏன் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி கொள்ளை லாபமடிக்கும் தனது வாரிசுகளயையும் தனது கட்சி அமைச்சர்களையும், தனது கட்சி சார்ந்த தொழில் நிறுவனங்களையும் மதுபானம் தயாரிப்பதை நிறுத்தச்சொல்லி ஒரு சிறு உத்தரவு கூட போட முடியவில்லை..... ???

மதுவிற்க்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சித்தலைவரின் மதுவின் மீதான ஒழுக்கத்தினை இந்திய மீடியாக்களில் இருந்து உள்ளூர் மக்கள் வரை அனைவரும் அறிவர்.

சாதிய ரீதியான அரசியலை முன்னெடுத்து தமிழகத்தில் ஒரு தரங்கெட்ட அரசியல் முன்னோடியாக திகழும் ராமதாசும் அன்புமணியும் அறிவார்களா சாதியை விட இம்மது ஒன்றும் மிகப்பெரிய கொடுமையை இத்தமிழக மக்களுக்கு செய்துவிட முடியாது என்று...????

கலிங்கப்பட்டியில் கிட்டத்தட்ட பலவருடங்களாக இருக்கும் அந்த டாஸ்மாக் கடை எப்படி இப்பொழுதுதான் வைகோவின் கண்களுக்குத்தட்டுபட்டது என்று தெரியவில்லை!!!

சரி இந்த அரசியல் கட்சிகளையும் அவர்களது தொண்டர்களையும் விடுவோம் மக்களையே எடுத்துக்கொள்வோம்.....

சரக்கு சாப்பிடுவது என்பது ஒரு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நவநாகரீக குறியீடாக எண்ணுகிறார்கள் தவறில்லை... ஆனால் நாகரீகத்தின் குறீயிடாக மது குடித்தாலும் அமெரிக்கனாகவோ அல்லது ஐரோப்பியனாகவோ நடந்து கொள்கிறாகளா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 

குடித்த பின் மீண்டும் நாகரிகமற்ற காட்டுமனிதனகாவே மாறிவிடுகிறான். 
எப்படி குடிக்க வேண்டும் எவ்வளவு குடிக்க வேண்டும் எதற்க்காக குடிக்க வேண்டும் என்ற எந்த வழிமுறையுமன்றி குடிச்சா சினிமால டிவில( இந்த காணொளி ஊடங்கங்கள் தமது தொலைக்காட்சிகளில் குடிப்பதை எப்படி பிரபலப்படுத்துகிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய கிளைக்கதை அதை இக்கட்டுரையை படிப்பபவர்கள் அனுமானத்திற்க்கே விட்டுவிடுகிறேன்)
நடிக்கிற அக்கதை மாந்தர்கள் நடிப்பது போல " ஊத்துனா போதையாகி மட்டையாகனும் மாப்ள அப்படி இல்லாட்டி சரக்கடிச்சதுக்கு என்ன அர்த்தம்", "போலிமது விக்கிறாயாங்கடா போதையே ஏறமாட்டேங்குது" என்று புலம்புவது தான் நமது மக்களின் இன்றைய நிலை. 

இப்படி தனிமனித வாழ்க்கையில் மிகக்கேவலமாக ஒழுக்கத்தின் கீழ்நிலையில் இருக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், சினிமா பிரபலங்களும் , பொதுமக்களும் இன்று அரசு மதுத்தொழில் செய்வது தவறென்று கூறி போராட்டம் நடத்துகின்றனர். 

நமது வேதங்களில், சொல்லி இருக்கும் மிகபொருத்தமான ஒரு வரியை மேற்கோள் காட்டி எமது இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறோம்.....

யதோ ராஜா ததோ பிரஜா என்பார்கள் ஆனால் இக்கலிகாலத்தில் " யதோ ப்ரஜா ததோ ராஜா என்றாகிவிட்டது, அதாவது, மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்வதுதான் அந்த மகேசனின் கடமையாகிவிட்டது அதனால் மக்களும் தமது சமுதாய கடமையை உணர்ந்து செயல்பட்டால், அரசு நமக்கு என்ன தேவையோ அதைச்செய்வதைத்தவிர வேறொன்றும் செய்துவிடமுடியாது.

No comments:

Post a Comment