காலை தொட்டுக்கும்பிடுவது, காலால் புத்தகத்தையோ அல்லது உணவையோ அல்லது பெரியவர்கள் என்று சொல்லப்படுபவர்களையோ தொடாமல் இருப்பது என்று நாம் இன்னும் பஞ்சமராய்த்தான் எண்ணத்தாலும் செயலாலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
கழிவை வெளியேற்றும் ஆணுறுப்பைக்கூட லிங்கம் என்று கருத்தாக்கம் செய்து அதற்கு தெய்வத்தையொத்த மரியாதையை செய்யும் நாம் நமது உடலின் இன்னொரு உறுப்பான காலை, நாம் நடந்து செல்ல நமது நகர்விற்க்கு மிக முக்கியமான பங்காற்றும் ஒரு உறுப்பை, எந்த விதமான கழிவுகளையும் வெளியேற்றாது(வியர்வையைத்தவிர்த்து அதை ஏறக்குறைய அனைத்து உடலுறுப்பும் வெளியேற்றத்தான் செய்கிறது) ஏன் இன்னும் மனுநீதி சார்ந்து இன்னும் தரக்குறைவாகவே நடத்துகிறோம் என்பது புரியவில்லை!!!
காலை ஏதோ மிகக்கேவலமான ஒரு உறுப்பாக கருதும் இந்த மனுநீதித்தனமான நடத்தையை முதலில் களையவேண்டும்.
சாதி மறுப்பை ஏற்றுக்கொண்ட முற்போக்கு மற்றும் சுயமரியாதையின் பால் பற்றுக்கொண்ட பலரும் இதை செய்கின்றனர்!!!
காலால் உணவை தள்ளுவது படிக்கும்புத்தகத்தை மிதிப்பது என்பதை எதோ கொலைக்குற்றமாக கருதுவதை முதலில் அழித்தொழிக்கவேண்டும்.
சுகாதாரகாரணங்களால்
உணவை காலால் தொட மறுக்கும் பலரும் பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, முறுக்கு பானிப்பூரி போன்றவற்றை செய்யும் இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு என்னிடம் சுகாதார ரீதியாக வாதிடலாம்!!!!
மலம் கழித்த பின் அதைகழுவும் இடதோ அல்லது வலது கையையோ மறுபடியும் கழுவி உடனடி சுத்தமான உறுப்பாக மாற்றிக்கொள்கையில் அதே போல காலையும் கழுவிவிட்டு பின் அதை சுத்தமான உறுப்பாக மாற்றிக்கொள்வது என்பது பெரிய பிரச்சனையே அல்ல!!!
மற்றபடி படிக்கும் புத்தகத்தை காலால் மிதிப்பது எல்லாம் மூடப்பழக்கத்தின் உச்சகட்டம்!!!

No comments:
Post a Comment