Saturday, October 24, 2015

மெய்நிகர் காலம்(Digital now)

மெய்நிகர் காலம்(Digital now):-)

நிகழும் அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நொடியில், இரு வெவ்வேறு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,நமது நிகழ் உலகம், மற்றொன்று இணைய உலகம்.நிகழ் உலகத்திற்க்கும்  இணைய உலகத்திற்க்கும் மாறி மாறி வாழ்ந்து வருவது என்பது நவீன கூடு விட்டு கூடு பாய்வது என்று முன்னமே 
பதிவு செய்திருக்கிறேன்.

ஒரே நேரத்தில இரண்டு காலங்களில் வாழ்கிறோம்.ஒன்று நமது சொந்த வாழ்க்கைக்கான காலம் இரண்டாவது மெய்நிகர் காலத்தில்!

இரண்டிற்க்குமான காலவெளி என்பது "நிகழ்" தான். 

மெய்யான உலகில் நமது உலகம் ஏற்கனவே இரண்டாக பிரிந்து உள்ளது, ஒன்று நமது இறந்த காலம், நிகழ்காலம் பின் எதிர்காலம் இவை மூன்றும் கூடிய நமது முழுமையான வாழ்க்கை என்பது ஒரு காலமாகவும், பின் நமது "இந்த நொடி" அதாவது நமது வாழ்க்கையெனும் பெருங்காலத்தை கட்டமைக்கும் சிறுங்காலமாகிய " இப்பொழுது நிகழும் நிகழ்வுகளினால் ஆன நிகழ்காலம்.

பிரச்சனை இப்பொழுது, இந்த 
உலகத்திலிருக்கும் அனைத்து மனிதனும் ஒரு ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியுடனே இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க மார்க் ழூகெர்ஸ்பெர்க் கண்டுபிடித்த ஒரு எந்திரம் தான் ஃபேஸ்புக்!!!!

No comments:

Post a Comment