சென்னை இப்படி ஒரு வெள்ளக்காடாய் மாறி மிதப்பதற்க்கு தனி மனித அறம் ஒரு மிக முக்கிய காரணம்.இன்று உயிர்வாழும் சமகாலத்தவர் எவரும் பார்த்திரா ஒரு ஆழிப்பெருமழை இப்படி நூறு வருடம் கழித்து பெய்யும் என்று எவரும் கனவில் கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டார்கள்.
பார்த்த இடத்தில் நிலப்பட்டா,ஏரி கண்மாய்களில் மனை வாங்க கேட்கும் இடத்தில் லஞ்சம், கையூட்டு, "எனக்கு லேக்வியூ பக்கத்துல வீடு" என்ற பதத்தில் இருக்கும் அதீத போதை, இப்படி தான் தனக்கு என்றதொரு குறுகிய வட்டத்தில் இயற்கையை பற்றி சற்றும் யோசிக்காமால், டெக்னாலஜி,கேட்ஜட்ஸ்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,மொபைல் என்று ஒரு மெய்நிகர் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகம் தான் இன்று கையறு நிலையில் கைபிசைந்து நின்றுகொண்டிருக்கிறது.....
இயற்கையை மீறிய செயற்கை எதுவுமே இயற்கையை வென்றதாய் சரித்திரம் இல்லையென்றாலும், இயற்கையை உதாசீனப்படுத்தியதே காரணம்.
இந்த அளவு மழை பெய்யக் காரணம் இயற்கையல்ல.இயற்கைக்கு விரோதமாய் மனிதர்களாய் நாம் செய்த வினைகள் தான் காரணம்.
இயற்கை மீது மனிதன் தொடுத்த கார்பன்டை ஆக்ஸைடு யுத்தத்துக்கு இயற்கை கொடுத்த பதிலடி.
புவி வெப்பமடைதல் அதனால் ஏற்படும் விபரீத மாற்றம்
இதற்கும் மனிதனே காரணம்.
ஓரிரு நாளோ அல்லது ஓரிரு ஆண்டோ நடந்த நிகழ்ச்சியல்ல இதற்க்கு காரணம்,
சற்று பின்னோக்கிச்சென்றால் இதற்க்கு யார் காரணம் என்று கண்டுகொள்ளலாம்,
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் விவசாயத்தைப் பின்னுக்கு தள்ளிய வெள்ளையர்கள் நீர்நிலைகளை தூர்வாருவதை நிறுத்தத்தொடங்கினர்.
அவர்களைத்தொடர்ந்து நமக்கு விடுதலை வாங்கித்தந்ததாக மார்தட்டிக்கொள்ளும் பார்ப்பன பணியாக்களும் 1947-க்கு பிறகும் விவசாயத்தை புறக்கணிக்கவே செய்தனர்.
1990க்கு பிறகு திட்டமிட்டு,உலகமயத்தால் ஏற்பட்ட அராஜகப் பொருளாதாரத்தால் பெருகிய நகர் மயமாக்கம்,அவற்றின் பின்விளைவாக கிராமங்களில் விளைநிலத்தையும் விவசாய நிலத்தையும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்றிவிட்டு அகதிகளாக நகரைநோக்கி வந்த மக்கள்,கிடைத்த இடத்தில் குடியேறியதும்,
அரசியல்வாதிகள்+அதிகாரிகள்+ லேண்ட் மாபியா கூட்டணி சேர்ந்து
பேராசைபிடித்து வரைமுறையில்லாமல் நிலத்தை சுருட்டி,ஆற்று மணல் கொள்ளையடித்ததும் பாதிப்புக்கு முக்கிய காரணம்.
விவசாயத்தை அழிக்கத் தொடங்கியதோடு நகர்மயமாக்கலால் தொழில்த்துறையில் முக்கியத்துவம் செலுத்தத்தொடங்கிய அரசுகள், இயற்கை மேலாண்மையில் தொலைநோக்குப்பார்வையோடு செயல்படவில்லை,கடந்த 50ஆண்டுகாலமாக தமிழகத்தில் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை.
அரடியல்வாதிகளும், அவர்களுக்கு ஊழல்செய்ய சொல்லிக்கொடுக்கும் அதிகாரிகளும் , இவர்களிருவருக்கும் லஞ்சம் கொடுத்தாவது தனது பேராசையகளை நிறைவேற்றிக்கொள்ளத்துடிக்கும் பொது மக்களும் சேர்ந்து,ஏரி,கண்மாய்,குளம்,போன்றவைகளை ஆக்கிரமிப்பு செய்து பட்டா போட்டு நீர்நிலைகளை அழித்தனர்.கால்வாய்கள்,வாய்க்கால்,நீரோடைகள், ஏரி,கண்மாய், பொதுக்கிணறு எதுவுமே பராமரிக்கப்படவில்லை.
காடுகளில்,மலைகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை,
1970க்கு பிறகு அணைக்கட்டுமானம் நடக்கவில்லை. அதற்கு முன்பு கட்டபட்ட அணைகளிலும் தூர்வாரப் படவில்லை.
இதையெல்லாம் ஒதுக்கிவிட்டால்கூட,மழை மிகக்கடுமையாக பெய்யும் என வானிலை அறிவுப்புகள் தொடர்ந்து எச்சரிக்கை செய்தாலும் அதை உதாசீனப்படுத்தியும், வானிலை ஆராய்ச்சி இயக்கத்தின் தலைவரை கிண்டலும் கேலியும் செய்யும் மனப்பான்மைதான் மக்களிடம் இருந்தது. மக்கள் எப்படியோ மகேசனும் அப்படியே என்பதற்க்கிணங்க அரசும் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.....
பின்னர் சுதாரித்துக்கொண்ட அரசும் மாநகராட்சி நிர்வாகமும், ஓரளவு பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடத்தொடங்கியவுடன், பலத்த உயிர்ச்சேதங்கள் தடுக்கப்பட்டு, வெறும் பொருட்சேதங்களோடு, தவிர்க்கப்பட்டது.
இவ்வளவு மோசமான அயோக்கியத்தனமான
அரசியல் கட்சிகளை தமிழகத்தைத்தவிர வேறு எங்கும் யாரும் பார்த்திருக்க முடியாது, அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி,
ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியையும் அதில் அவர்களுக்கு சாதகமான அல்லக்கைகளை விவாதம் செய்பவர்கள் போன்றும் சமூக ஆர்வலர் போன்றும் சித்தரித்து தங்களுக்கு அரசியல் ரீதியான சாதகமான செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு நிலமையிருக்கையில் மீட்புப்பணியிலும் அரசை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் மழையின் வீரியத்தையும் அரசின் கையையும் மீறியதொரு இயற்கைச்சீற்றம் என்பது புரிந்த பின் தான் வெறும் வாயால் மெல்லுவதை நிறுத்தினர்.
ஆளும் அரசும் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அரசியல் சதியின் காரணமாகவும், இம்மழையை,இயற்கை பேரிடரை தமக்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதையுணர்ந்த ஆளும் கட்சி பேரிடராகவோ அல்லது மக்கள் மன்றம் முன் வந்து தமது நிர்வாகத்தில் நடக்கும் நல்லவைகளைக்கூட சொல்ல தயாராகவில்லை, அல்லது அறிக்கையாக்கூட அறிவிக்கக்கூட தயாராகயில்லை.
மத்திய அரசும் இவர்கள் அனைவருக்கும் சற்று கூட சளைத்தவர்கள் அல்ல,மத்திய அரசும் இத்தனைநாள் வாய்திறக்காமலிருந்து விட்டு விமானப் போக்குவரத்து ரத்து,மிகப்பெரிய அளவில் செய்தியாக்கப்பட்டவுடன் தான்,வாய் திறந்துள்ளனர்.ஆனாலும் அவர்களும் பேரிடாராக அறிவிக்கப்போவதில்லை.
இந்திய தேசியமென்பது எப்போதுமே தமிழ் நாட்டுக்கு எதிரானதுதான்.
மீனவர்,மீத்தேன்,கூடங்குளமாக இருந்தாலும்சரி வெள்ள பாதிப்பாக இருந்தாலும் சரி நமக்கு எதிர் நிலைதான் எல்லாவற்றிலும்.
இப்போது மீட்புப்பணியில் ஈடுபடுவது மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு படையினர்,அந்தந்த பகுதி இளைஞர்கள்,சமூக உணர்வாளர்கள்தான்,உணவு, இருப்பிடம், உடை தருவது எல்லாமே சக நடுத்தர வர்க்க மக்கள்தான்
ரியல்எஸ்டேட் முதலாளிகள்,கோடி கோடியாக கொள்ளையடித்த அரசியல் வாதிகள், வெள்ளையில் காலும்,கருப்பில் முக்காலும் சம்பளம் வாங்கும் நடிகர்கள் 97%பேர் வாயே திறக்கவில்லை.
திறக்கவும் மாட்டார்கள்.
கார்ப்பரேட் முதலாளிகள் இனி ஒரு வருடத்திற்க்கு சென்னையில் முதலீடு பற்றியோ அல்லது இதர தொழிரீதியான நடவடிக்கைகளோ செய்யமாட்டார்கள்.
எமது பார்வையில்,இன்று நம் கண்முன் நாம் காணும் இத்துனமான நிலைக்கு காரணமாக நாம் குற்றம் சாட்ட முடிவது இந்த பாதிப்புக்குக் காரணம் 40% அரசு,40%மக்கள்,20%இயற்கை.
20% இயற்கைக்காரணத்தை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் அதன் வீரியத்தை, பின் விளைவுகளை பாதிப்பை குறைக்கலாம்,
அவ்வாறு குறைப்பதற்க்கு, பொதுமக்களாகியா நாமும் நமது அரசும் செய்ய வேண்டியது.....
மீட்பு நடவடிக்கை முடிந்த பின் , வெள்ள நீர் வடிந்த பிறகு, மாநில அரசு,தேசிய நதிநீர் போன்ற பெரிய பெரிய கனவுத்திட்டங்களைப்பற்றி பேசுவதை விட்டு, பக்கத்து மாநிலங்களுடன் தண்ணீர் பேரம் பேசுவது போன்றவற்றை நிறுத்திவிட்டு, தமிழகத்து நதிகளை இணைக்க வேண்டும்.காவிரி ஆற்றுப்பாசனம் மேட்டூரிலிருந்து கடல்வரை
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,
வைகை பாசனப் பகுதி நீர்நிலைகளை உடனடியாக தூர்வார வேண்டும்.
அதேபோல பொதுமக்களும் தமது தனிப்பட்ட அறம் சார்ந்ததொரு நிலையில், செய்ய வேண்டியது,
வெப்பமடைந்து வரும் பூமியை குளிர்விக்க வேண்டும்.அதற்கு ஒவ்வொருவரும் நம் வீட்டை சுற்றியும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
(சும்மா போட்டோக்கு போஸ் கொடுக்குற மாதிரி இல்ல)
நமது குப்பை கூலங்களை குப்பைத்தொட்டியில் போட்டு அக்குப்பைத்தொட்டிகளை சரியாக பராமரிக்கவும் வேண்டும்.
இதையெல்லாம் சரியாக செய்வதற்க்கு மாநகராட்சிக்கும் அரசுக்கும் சரியாக முறையாக வரி கட்டவேண்டும்... (அப்புறம் நல்லா கேள்வி கேக்கலாம்)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பாடமாக, நெறியாக வைக்க வேண்டும்,
கிராமம், தெரு,ஊர், நகரமென எங்கு வசித்தாலும் மாணவர் கூட்டமைப்பு
இளைஞர் கூட்டமைப்பு,மாணவர் கூட்டமைப்புகளாக சேர்ந்து நீர்நிலைகளை தூர்வாருவது நீர்நிலைகளை பாதுகாப்பது என்பதை வருடத்திற்க்கு 3 முறையாவது செய்ய வேண்டும் இதையே நமது கலாச்சாரமாக மாற்ற வேண்டும்.
குடிநீருக்கு தரும் முக்கியத்துவத்தை கழிவுநீர், மழைநீர் வெளியேற்றுவதற்கான வழியிலும் காட்ட வேண்டும்.
மட்கும் குப்பை மட்காத குப்பையை தனித்தனியாக பிரித்து அழிக்க மறுசுழற்சி செய்யப் பழக வேண்டும்
கூடியமட்டும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் இருந்தா கஷ்டம்தான்...
கலி முத்திடும்.......

No comments:
Post a Comment