Thursday, May 03, 2012

மிச்சமிருக்கும்...........

ஆரவாரமற்ற அதுவாக இருக்கும்
பூவின் நலம் விசாரித்து
பல நாட்கள் ஆகிவிட்டது.
காதலாய் பின் தொடரும்
நிலவையும்
நிராகரித்துவிட்டாயிற்று!!
சின்ன தட்டான்,அணில் குஞ்சு,
வாசனை தெரிந்து
வாலாட்டி குலைக்கும்
நாய்குட்டியையும்
மறந்து
மாமாங்கம்
பல போயிற்று!!
சினேகமாய்
சிரிக்கும்
எதிர்வீட்டு
சின்ன பெண்ணின்
முகம் கூட நினைவிலில்லை???
பாசமாய்
குசலம் விசாரிக்கும்

திண்ணை கிழவி 
செத்து போய்
சில பல வருசங்களாகியிருக்கலாம்!!
முடியாத இரவுகளின்
நீண்ட கைகளில்
படர்ந்து திமிரும்
கருமிருட்டில்
அனேகமாக 
எப்பொழுதும் 
அனாதையாக 
"நான்" இருக்கையில்
இப்படி 
தவிர்க்கவியலாத   நினைவு தூசி  
திமிறி தெறித்து 
வெடித்து
விட்டு செல்லும்
நிர்பந்தங்களுக்கிடையிலும்
“இருக்க” தான் செய்கிறது
வாழ்க்கை!!!!

No comments:

Post a Comment