பிரமாண்டமான அறைக்குள்
நுழைந்த பின்
பார்த்தால்,
ஆயிரத்திற்க்கு
கொஞ்சம் குறைவாய்
மனிதர்கள்,
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
உலகம்,
அவரவர் அவர்களின்
உலகில்,
ஆனாலும்
மனிதமில்லாமல்
மனிதர்களுடன்
இன்னும் எத்தனை
காலம்தான் இவ்வுலகில்
வாழ்வது.....
கைத்தொலைபேசியில் உறவுகள் வாழ்கிறது,
மின்னஞ்சலில்
மட்டுமே சுகம் விசாரிக்கப்படுகிறது,
மனிதர்களுடன் மனிதர்கள் தூரப்போவதைக்கூட ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாமெனினும்
மனிதத்திலிருந்து
தூரம் போவதை எவ்வகையில் சேர்ப்பது?
சுருக்கப்பட்ட பிரம்மாண்டத்தில்
சுவரஸ்யமிருப்பதாய் எனக்கு இறுதிவரை
படவேயில்லை.
தகவல் பறிமாற்றத்தின் இடைவெளி குறைக்கப்பட்டபின்
உணர்வுகளினிடையே பிறந்தது தூரம்.
அணுவணுவாய் சுருக்கப்பட்டு சுருக்கப்பட்டு
மீண்டும் அணுத்துணுக்காய் மாறிவிடுமோ பிரபஞ்சம்???
அப்படி அணுவாய் மாறியபின்னாவது நிகழட்டும்
இன்னொரு
அணுவெடிப்பு,
பின் மீண்டும்
ஒரு புதிய பிரமாண்டம்
No comments:
Post a Comment