Thursday, December 19, 2013

அரச கட்டளையும் காமன் கட்டளையும்

ஓரினச்சேர்க்கையாள நண்பர்கள் எனக்கு பல உண்டு
தமிழ்சமூகத்தில் இவர்களை பலருக்கு அறிமுகமில்லாத காரணத்தால் நான் இவர்களை அறிமுகப்படுத்துகிறேன்......

நண்பர் 1:-

இவர் 20 வயதையொத்த அழகிய பெண்.இவருடைய அழகு எந்த ஆணையும் திரும்பிப்பார்க்கச்செய்யும், எனவே பல ஆண் நண்பர்கள்!!! இவருக்கு பெண் நண்பர்களும் உண்டு.
இவர் ஒரு "இரு பால் விரும்பி",

ஆனால் ஆண்களுடன் இவர் உடலுறவு கொள்வதை விட பெண்களுடன் உறவு கொள்வதையே விரும்புவார்.இவருக்கு ஒரு ஆண் காதலரும், பல பெண் பால்உறவுகொள்ளும் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.இவருடைய ஆண் காதலர்க்கும் இவர் இரு பாலின உறவு கொள்பவர் எனத்தெரியும்!!!

இவர் பெண்களிடம் பெண்ணைப்போலவும் ஆண்களிடமும் பெண்ணைப்போலவும் உறவு கொள்பவர்!!!!

நண்பர்2:-

இவருக்கு வயது 39 இருக்கும், பெண்!!! ஆனால் ஒரு ஆணைப்போல இருப்பவர்!! பாலியல் மாற்றம் செய்யாதவர்!! அதாவது உடலால் இவர் இன்னும் பெண்தான் ஆனால் மனதாலும், நடையுடை பாவனையில் இவர் ஆணாக தன்னை கருதிக்கொள்பவர்!!

இவருக்கு ஒரு பெண் காதலி உண்டு. இருவரும் பல வருடங்களாக சேர்ந்து வாழ்கிறார்கள்!! இவர் தனது பெண் காதலியிடம் தான் ஒரு ஆணாக கொண்டு உறவு கொள்பவர்!!

இவரிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சீரியசாகவே கேட்டேன், ஒரு ஆணாக என்னால் செய்ய முடியாததை நீ என்ன செய்துவிட முடியும்???

அதற்க்கு அவர் சொன்ன பதில், சத்யா இதை சொல்லால் சொல்ல முடியாது, அனுபவிக்க வேண்டும், ஒரு ஆணால் எப்பொழுதும் பெண்ணிற்க்கு என்ன பிடிக்கும் என்பதை கண்டு பிடிக்க முடியவே முடியாது அவனுக்கு அவன் சுகம் அல்லது அந்த நேர காமவெளிப்பாடு, அல்லது அந்த பெண்ணின் அழகில் மயங்கி எப்படியாவது அவளுடன் பாலுறவு கொண்டு தனது ஆண் அகங்காரத்தை தீர்ப்பது அல்லது வெறுமனே பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டும்தான்,

ஆனால் என்னிடம் அப்படியல்ல எனது காதலிக்கு காமத்தில் உண்மையாக என்ன சுகம் என்று தெரிந்து அவளுக்கு தருவதில் அவளுக்கு முழு திருப்தி!!
உனக்கு இது புரிவது கஷ்டம் என்று சொல்லி விட்டார்!!!

நண்பர் 3:-

இவர் எனக்கு மிக நெருங்கிய மதிக்கும் 45 வயது ஆண். இரு குழந்தைகள்!!!அருமையான குடும்பம்.
ஆனால் பெண்கள் விஷ்யத்தில் மிகுந்த சல்லாபி!!! பெண் பித்து என்று சொல்ல முடியாது ஆனால் வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டார், வாய்ப்புக்களையும் உருவாக்கிகொள்வார்.

இவருடன் ஒரு முறை அருகிலிருக்கும் ஒரு நாட்டிற்க்கு சென்றேன்!!!பின் இரவில் பார்ட்டிக்கு செல்வோம் என்று சொல்லி தனது நண்பரை அழைத்தார், நான் ஒரு அழகான பெண்ணை எதிர்ப்பார்த்தேன், வந்தவர் அழகானவர்தான், ஆனால் பெண்ணைப்போல இருக்கும் ஆண்,

எனக்கு கொஞ்சம் குழப்பமாகத்தானிருந்தது இருப்பினும்,
அவர்களுடன் சென்றேன். பின் பார்ட்டி முடிந்தது நண்பரும் அவரது நண்பரும் தனியே சென்று விட நான் எனது அறைக்கு திரும்விவிட்டேன்.

மறுநாள் நண்பரிடம் கேட்டேன்,
அதற்க்கு அவர் சொன்ன விசயம் கவனிக்கப்ப வேண்டியது, "சத்யா பெண்களிடம் உறவு கொண்டு போர் அடித்துவிட்டது,
எனவே தான் இப்படி , ஒரு இரு வருடங்களுக்கு முன்னர் இவருடன் எனக்கு நட்பு ஏற்ப்பட்டது அதன் பின் எப்பொழுதெல்லாம் நான் இங்கு வருகிறேனோ அப்பொழுதெல்லாம் இப்படி, என்று....

நண்பர் 4 :-

இவர் பெண், ஆனால் இவருக்கு ஆண்களை கண்டால் நட்பு மட்டும்தான் ஆனால் பெண்களை கண்டவுடன் காதல் பிறந்துவிடும், பாலியல் ரீதியான உறவை விட பெண்களுடனான காதல் மட்டுமே பிரதானம்.ஒரு ஆண் பெண்களை கண்டவுடன் எப்படி கிளர்ச்சியடைவானோ அதேபோல காதலாலும் காமத்தாலும் கிளர்ச்சியடைபவர்!!!

இவர்கள அனைவரும் ஒவ்வொரு விதம் ஒவ்வொரு பாலியல் விருப்பம், ஆனால் இவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒற்றுமை

இவர்களில் ஒருவர் கூட தமக்கு பிடிக்காத அல்லது தம்மை பிடிக்காத மற்றொரு பாலினத்திடம் உறவோ, தகாத செயலோ செய்தது கிடையாது,

மற்றொரு ஒற்றுமை, இவர்களுடன் செல்லும் நம்மை மிக பாதுகாப்பாக வைத்திருப்பது!!!

தனது பாலியல் வக்கிரங்களுக்காகவோ அல்லது பாலியல் உறவுக்காக எவரையும் வன்புணர்வு செய்வதில்லை, அவரவர்க்கான நியாயம் அவரவர்களுக்கு......

இயற்க்கைக்கு மாறான என்ற ஒற்றைச்சொல்லுக்குள் இவர்களுடைய விருப்பங்களை தகாத உறவென்று சொல்லுவதும் அதற்க்கு தண்டனை வழங்குவதும் காட்டுமிராண்டி செயலன்றி வேரென்ன???

இன்றைய மானுட சமூகம் இயற்கைக்கு எதிராகத்தான் வீறு கொண்டு நிற்கிறது, அவற்றை தண்டிப்பது யார்???

ஒரு சக மனிதரின் விருப்பத்திற்கெதிராக வன்புணர்வு செய்பவர்கள் மாட்டிக்கொண்டால்தான் தண்டனை ஆனால் இவர்கள் ஒத்த விருப்பத்துடன், சுய பிரஞ்கையுடன் பூரண சம்மதத்துடன் செய்தாலும் ஒரே பாலுணர்வு என்று சட்டம் தடுப்பது எங்ஙனம்???

இந்திய சட்டத்தின் படி பார்த்தால், ஒரு கணவனும் மனைவியும் அல்லது விருப்பத்துடன் இரு பாலர் செய்யும் வாய் புணர்தல் ஆசன வாய் புணர்தல் இதையெல்லாம் கூட தண்டனைக்குறிய குற்றமென்கிறார்கள், இதை இப்படி நடந்தால் யார் போய் சட்டதிடம் சென்று சொல்வது???? என்ன ஒரு வினோதமான சட்டம்???

மதுரை காலேஜ் ஹவுஸில் கை மதுனம் செய்பவர்களை எதோ செய்யக்கூடாத பாவத்தை செய்துவிட்டவர்களை போல பாவித்து, அவர்களுக்கு உளவியல்ரீதியான மன உளைச்சலை கொடுத்து காசு பார்க்கும் போலி மருத்துவர்களுக்கும் இந்த சட்டத்துக்கும் என்ன வித்தியாசம்???

சுய இன்பத்தை தடுக்க எந்த சட்டத்தில் வழியிருக்கிறது???

இவையெல்லாம் தனிமனித உரிமையையும் தாண்டி, இயற்கைக்கு மாறானது என்ற வாதத்தை தாண்டி,  சக மனிதனுக்கு எந்த வழியிலும் எவ்வகை துன்பமும், தொந்தரவும், பிரச்சனையும், மன உளைச்சலும், தராத விசயங்கள் என்ற ரீதியில் அணுகப்பட வேண்டிய விசயம்.

மேலே குறிப்பிட்ட நண்பர்களில் மூன்றாவது நண்பரின் செயல் மட்டுமே அறிவியல் ரீதியான விளைவுகளுக்காக ஆராயப்படவேண்டியது என நினைக்கிறேன் எனெனில் அவர் தனது மனைவி, பெண் நண்பர்கள் பின் ஓரினச்சேர்க்கை கொள்கிறார், மற்றபடி இது அவரவர் விருப்பம்....

உனக்கும்
எனக்குமான வெளியில்
அனேக விந்தைகள்
அதில்
வரும் இடர்களும் உனக்கும்
எனக்கும் சொந்தமானவை,
அங்கிருக்கும் சுகத்தைப்போலவே....
யாருக்கும்
பதில்சொல்ல
அது மற்றவருக்கான
வெளியல்ல,
உனக்கும்
எனக்கும்
மட்டுமானது,
கீழ் புக
மேல் புக
பின் புக
முன் புக
என்று எதில்
புணர்வது
என்பதை
முன்முடிவு
செய்துகொண்டு
புணர
காமமென்ன
அரசகட்டளைக்கு
அடிபணியும்
அப்பாவி
"குற்றமா"????

No comments:

Post a Comment