Wednesday, December 25, 2013

சமூக வலைத்தளங்களும், மார்க்கெட்டிங்க் ஸ்ட்ரெஜிகளும்!!!!

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், இணையத்திலும் சரி , இணையத்துக்கு வெளியிலும் சரி, ஒரு பொருளை சந்தைப்படுத்தி அதை சரியான நுகர்வோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் அதை விற்பனையாக மாற்றுவதிலும் உலகம் முழுவதும் ஒரு முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில்,

நமது தமிழ் சூழலிலும் சமூக வலைத்தளங்களில் யாராவது மிகச்சரியான ஒரு பொருளுக்காக முன்னெடுப்பார்கள் என்று எண்ணியிருந்தேன், அதை ஒரு ஃபேஸ்புக் பிரபலம் தனது வெளியிடப்பட இருக்கின்ற ஒரு புத்தகத்திற்க்காக உபயோகப்படுத்தியதும் ,மிக மகிழ்ச்சியாக இருந்தது,

மிகச்சரியான ஒரு நேரத்தில், மிகச்சரியான ஒரு பொருளுக்காக ( புத்தகங்களை யாரும் தமிழ்ச்சமூகத்தில் வாங்குவதில்லை என்று எழுத்தாளர்களும், பதிப்பகத்தார்களும் புலம்பிக்கிண்டிருந்ததொரு சூழலில்) இந்த சமூக வலைத்தளங்களை தனது புத்தகத்திற்க்காக சந்தைப்படுத்துவதற்க்கு பயன்படுத்தப்போகிறார் என்பதையெண்ணி மிக ஆர்வமாக இருந்தேன்,

ஆனால், நடந்தது என்னவோ தலைகீழ்!!!!!

முயற்சியும் வழியும் சரியானதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்திய விதத்தில், இணையத்திலும் நாங்க பிக்காளிப்பசங்களாவே திரிவோம்
வெளியே இருக்கிற அசிங்கத்த இங்கேயும் கொண்டாந்து பரப்பி....

இதை மிகக்கேவலமான அரசியலாக்கி,தரக்குறைவான விதத்தில் விமர்சிப்பது போலவும், அல்லது விமர்சிப்பது போல நடித்தும், அதற்க்கு ஒரு நாலைந்து பேரை தமக்கு துணைம்கு அழைத்து எவ்வளவு கேவலமாகவும் அசிங்கமாகவும் அதை செய்து, தன்னையும் அசிங்கப்படுத்தி, தனது ஆளுமையையும் அசிங்கப்படுத்தியதோடு நில்லாமல்,

இனி கொஞ்ச நாளுக்கு எவனுமே இந்த தமிழ் சமூக வலைத்தளங்களை இந்த மாதிரியான ஒரு நல்ல முயற்சிக்கு,"பயன்படுத்தவே பல முறை யோசிக்க" வைத்ததுதான் நடந்து முடிந்தது.

இவர்கள் எந்தவிதமான புனித பிம்பங்களையும் கட்டுடைப்பது பற்றி நமக்கு கவலையில்லை அது அவர்களது சுதந்திரம் "வானளாவிய அதிகாரம்"

ஆனால் இவர்களை இணைய பிரபலமாக கருதிக்கொண்டு இவர்களை ஒரு முன்னுதாரணமாக கொண்டு இயங்குபவர்களுக்கும், இவர்களின் இவ்வாறாக இயங்குவதை தவறாக கருதி இந்த இணையம் கொடுத்திருக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் வரம்பற்ற எல்லையை சுருங்கச்செய்வது தமிழ் இணையத்திற்க்கான ஒரு சாவுமணியன்றி வேரொன்றுமில்லை.

இதில் இன்னும் மிக மனவருத்தத்தை தந்தது,

நான் கவித எழுதுவேன்,கழகத்த காப்பாத்துவேன், தமிழ் தேசியமைப்பேன்,எலக்கியம் பேசுவேன்,எழுதுவேன், எழுதுனத பதிப்பிடுவேன், புரட்சி பண்ணுவேன் புண்ணாக்கு சாப்பிடுவேன், அப்படின்னு சீன் போட்டுகிட்டு இம்மாதிரியான சமூக வலைத்தளங்களில் இயங்கிக்கொண்டிருந்த பல "கள" பிரபலங்களும் தமிழ் நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளும், பத்திரிக்கையாளர்களும், பதிப்பகத்தாரும், அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டு வந்தவர்களும் கருத்து சொல்கிறேன் பேர்வழியென்று இவ்விசயத்தை இன்னும் அசிங்கப்படுத்தியும், அதை எவனாவது எவளாவது திருப்பி கேட்டா கும்பலா சேந்து கும்மியடித்ததும்,மிக கீழ்த்தரமான நிகழ்வாகும்!!!

நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து, தமது எழுத்தை சந்தைப்படுத்த முதல் முயற்சியெடுத்த அந்த பிரபலத்தை வாழ்த்தியும், அவரைப்போலவே வரிசையிலிருக்கும் பல இளம் மற்றும் புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியும்,

இணையம் நமக்குத்தந்திருக்கும், இப்பெரும்வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியும், தமிழில் இன்னும் பலரை எழுத வைத்தும் எழுதியவ்ர்களையும் அவர்களின் எழுத்தையும் ஆதரித்து,

இன்னும் பல இதுபோன்ற சீரிய முயற்சிகளும் இதைவிட இன்னும் பல புதுமையான முயற்சிகளையும் செய்து......இந்த இணைய பிரபலங்களும், கள பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும், பதிப்பக பிரபலங்களும், எழுத்தாள பிரபலங்களும் தமிழ் சமூக இணையதளத்தை இதைவிட இன்னுமொரு படி உயர்த்த விழைவார்கள் என்ற கனவுடன் ......


No comments:

Post a Comment