ஒரு முறை சிங்கையில் இருந்து டில்லி சென்றேன்,
இமிக்ரேஸன் அதிகாரி என்னிடம், இந்தியும் ஆங்கிலமும் கலந்த ஒரு தேவபாஷையில் கேட்கிறார்,
சிங்கப்பூர்ல இருந்தா வர்றீங்க
நான் - ஆம்!!!
அதிகாரி- உங்க பாஸ்போர்ட் திருச்சியில கொடுக்கப்பட்டு இருக்கு, ஆனா சொந்த ஊரு மதுரைன்னு போட்டு இருக்கு ???
நான் - ஆமாம்!!!
அதிகாரி- ஆனா நீங்க சிங்கப்பூர்ல இருந்து டில்லி எதுக்கு வர்றீங்க ??
ஒன்னு நீங்க சிங்கைல இருந்து மதுரை போகனும்
இல்லாட்டி திருச்சி போகனும்
ஆனா சம்பந்தா சம்பந்தமில்லாம டில்லிக்கு எதுக்கு வர்றீங்க???
நான் - டில்லில வேலை இருக்கு சார் அதுதான்.....
மறுபடியும்
அதிகாரி கொஞ்சம் கடுமையாக
சம்பந்தமே இல்லாம நீங்க டில்லிக்கு ஏன் வரணும், உங்கள அனுமதிக்க முடியாதுன்னா என்ன செய்வீங்க
நான் - சரிங்க சார் அப்படின்னா அப்படின்னா எனக்கு டில்லிக்கு on arrival visa ஃபார்ம் கொடுங்க நான் ஃபில் அப் பண்ணி தரேன்!!!
அதிகாரி- (சரி கடுப்பா) அது எப்படி நீ இந்திய பிரஜை தான ஒனக்கு எப்படி வீசா ஃபார்ம் தரமுடியும்
நான் - நீங்க தான சொன்னீங்க டில்லிக்குள்ள அனுமதிக்க முடியாதுன்னு....
அதற்க்குள் இன்னோரு அதிகாரி (இவரை விட பெரிய அதிகாரியாக இருக்கக்கூடும்)
என்னப்பா பிரச்சனை.......
இப்போ நம்ம அதிகாரி திரும்பி மொதல்ல இருந்து...
சார் இவரு பிறந்தது மதுரை, பாஸ்போர்ட் கெடச்சது திருச்சி, ஆனா இவரு சிங்கப்பூர்ல இருந்து டில்லி வர்றாரு, சரியான காரணமில்லாட்டி உள்ள விடமாட்டேன்னு சொல்றேன் ஒடனே இவரு டில்லிக்கு on arrival visa குடுங்கன்னு சொல்றாரு!!!
இப்போ பெரிய அதிகாரி என்கிட்ட-என்ன சார் ப்ராப்லம்
நான் - சார் நான் பொறந்தது மதுரை ஆனா அந்த டைம்ல ம்துரைல பாஸ்போர்ட் ஆபிஸ் இல்லாதனால திருச்சில எடுத்தோம்
.இப்போ சிங்கப்பூர்ல தொழில் செய்றேன்,
கல்யாணம் ஆனது நம்ம கூர்காவ்ன் பொண்ணு, அதனால மாமனார் வீட்டுக்கு போயி பாத்துட்டு அதுக்கப்புறம் மதுரைக்கு போக பிளான் சார்!!
இப்போ நம்ம பழைய அதிகாரி,அரே பாப்ரே இவரு நம்ம ஊருல சம்பந்தம் பன்ணிருக்காருப்பா அப்படின்னு சந்தோசமா பாஸ்போர்ட்ல ஸ்டாம்ப் அடிச்சு குடுக்க.....
நான் திரும்பி அம்மாஞ்சியா பெரிய அதிகாரி கிட்ட திருப்பி, சார் இந்திய பிரஜைக்கு டில்லிக்கு வர்றதுக்கு ஆன் அர்ரைவல் வீசா இருந்தா அந்த ஃபார்ம் குடுங்க அட்லீஸ்ட் அடுத்த தடவை யூஸ் ஆகும் அப்படின்னே....
இன்னி வரைக்கும் எனக்கு புரில இந்தியன் பாஸ்போர்ட் இருக்கும் ஒரு இந்தியனுக்கு டில்லில நுழைவதற்க்கு அனுமதியில்லையா????

No comments:
Post a Comment